கெந்திங் ஹைலேண்ட்ஸ் வணிக வளாகத்தில் உள்ள நகைக்கடையில் கொள்ளை நடந்ததை காவல்துறை உறுதி செய்துள்ளது.

இந்தக் கொள்ளைச் சம்பவம் நண்பகல் வேளையில் நடந்திருக்கக்கூடும் எனப் பகாங் தற்காலிகக் காவல் துறைத் தலைவர் அஸ்ரி அக்பர் அயோப் தெரிவித்துள்ளார்.

ஒரு பெரிய சாக்குப் பையுடன், கருப்பு உடை அணிந்த இரண்டு ஆண்கள் வணிக வளாகத்தின் வழியாக ஓடிச் செல்லும் காணொளியின் திரைப்பிடிப்பு.

பகாங் மாநில காவல் துறை, கெந்திங் ஹைலேண்ட்ஸில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த நகை கடை ஒன்றில் இன்று கொள்ளை சம்பவம் நடந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

கெந்திங் ஹைலேண்ட்ஸ் காவல் துறை உதவி ஆணையர் அஸ்ரி அக்மர் அயோப் கூறுகையில், இக்கொள்ளை சம்பவம் நண்பகல் சுமார் 12 மணியளவில் நடந்திருக்கலாம் என நம்பப்படுவதாகவும், இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

“நாங்கள் இன்னும் வழக்கு தொடர்பான விவரங்களைச் சேகரித்து வருகிறோம். மேல் தகவல்கள் மற்றும் முன்னேற்றங்களை விரைவில் பகிர்ந்து கொள்வோம்,” என்று பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் அவர் கூறினார்.

இக்கொள்ளை சம்பவத்தின் பின்னணியைக் காட்டும் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஒரு வீடியோவில், கருப்பு நிற உடை அணிந்த இரு நபர் பெரிய பை ஒன்றை ஏந்தியபடி வணிக வளாகத்தினுள் ஓடுவது பதிவாகியுள்ளது.

திரெட்ஸ் (Threads) பயனரான @nia.naas என்பவர், இக்கொள்ளை சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதி தற்காலிகமாக முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாகப் (lockdown) பதிவிட்டுள்ளார்.

“கொள்ளையர்கள் கெந்திங் பகுதியிலிருந்து தப்பிப்பது மிகவும் கடினம். கீழே செல்லும் ஒவ்வொரு சாலையிலும் சோதனைச்சாவடிகள் (checkpoints) உள்ளன. காவல் துறையினர் நிச்சயமாக அவர்களைப் பிடித்துவிடுவார்கள்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பயனரான @j00raaaa, இந்த தற்காலிக முடக்கம் காரணமாக கென்திங் ஹைலேண்ட்ஸைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும், @faridaspar என்ற பயனர், கென்திங் மலையிலிருந்து வெளியேறும் அனைத்து வாகனங்களையும் காவல் துறையினர் தீவிரமாகச் சோதனையிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.