வளமான வாழ்வு..! 

வரமான வாழ்வு 
#வளமான வாழ்வு..! 

எந்தன் வாழ்வில் 
வைபவம் நித்தம் 
இன்பம் கூட்டுகிறாய் 
இறைவா 
வந்தெனை வாழ்த்துகிறாய்..! 

ஊதியம் நாடி 
உழைத்துக் களைத்தேன் 
உற்சாகம் ஊட்டுகிறாய் 
இறைவா 
உடன் துணை வருகின்றாய்..! 

உழைப்பு விதையில் 
முளைக்கும் காசு 
உற்ற துணையாக 
இறைவா 
பெற்றேன் உன் தயவால்..! 

கற்ற மக்கள் 
சுற்றம் எனவே 
சுற்றி இருக்கின்றார் 
இறைவா 
கவலைகள் அறுக்கின்றாய்..! 

தொட்டுத் தமிழை 
அள்ளி எடுத்தேன் 
கவிதை ஆக்குகிறாய் 
இறைவா 
என் எழுத்தினில் இருக்கின்றாய்…! 

தோண்டிட ஊறும் 
கேணியைப் போன்றே 
கருணை சுரகின்றாய் 
இறைவா 
நீயருள் புரிகின்றாய்..! 

வேண்டிய யாவும் 
வேண்டியபடியே 
வரமாய் பெறுகின்றேன் 
இறைவா 
பிறவி நிறைவுற செய்திடுவாய்..! 

#சொ.சாந்தி

TAGS: