என்ன ஒரு பாராபட்சம் – சாந்தி முத்துசுவாமி
மகள் தனிக்குடித்தனம் போனால் கெட்டிக்காரி
மருமகள் போனால் கொடுமைக்காரி!
மகள் பகலில் தூங்கினா களைப்பு;
மருமகள் தூங்கினால் கொழுப்பு!
மகள் சமைத்தால் ஆஹா அருமை;
மருமகள் சமைத்தால் ஐயோ கொடுமை!
மகள் ஒன்று செய்தாலும் ஆராதனை;
மருமகள் என்ன செய்தாலும் பாராயின்மை!
மகள் எல்லாம் தெரிந்த அறிவாளி;
மருமகள் ஒன்றும் தெரியாத கோமாளி!
மகள் வளர்க்கும் பிள்ளைகள் தலைமேலே;
மருமகள் பெற்ற பிள்ளைகள் கால்கீழே!
மகள் கணவனோட ஊருலகம் சுற்றுனும்;
மருமகள் அடங்கி விட்டுல இருக்கணும்!
மகள் மாமியாருக்கு வாய் சரியில்லையாம்;
மருமகள் மாமியாருக்கு மனசு சரியில்லையாம்!
மகள் கணவன், குடும்பத்துக்கு பொறுப்பா இருக்கனும்;
மருமகள் கணவன், அம்மாவுக்கு புள்ளையா இருக்கனும்!
போங்கயா நீங்களும் உங்க பாராபட்சமும்!