மகுடம்

அவன் சரியில்லை இவன் சரியில்லை 
எவன் தான் சரியாய் இருக்கின்றான். 

வார்த்தையில் ஒன்று வாழ்க்கையில் ஒன்றாய் 
மாறிப் போய்த்தான் கிடக்கின்றான். 

குணத்தை மறைத்தான் கொள்கையை மறைத்தான் 
குரலில் விறைத்தான் பொய்யாய் சிரித்தான்! 

இருக்கட்டும் நண்பரே இருக்கட்டும் நண்பரே 
இதனால் எனக்கொரு கவலை இல்லை. 

உங்களில் இருந்து நான் வேறுபடுகிறேன் 
உண்மையாய் இருக்கவே பாடுபடுகிறேன் 
மனிதன் என்றொரு மதுகம் சூடுவேன் 
மானிடர்க் காகவே என்றும் பாடுபடுவேன்!

(வானம்பாடி கனவுதாசன்)

-eluthu.com

TAGS: