திரெங்கானுவில் கூரை இடிந்து விழுவதற்கு யார் பொறுப்பு?

1 roofதிரெங்கானுவில் பொதுமக்கள் வசதிக்காக உள்ள கட்டிடங்களின் கூரைகள் எத்தனை தடவை இடிந்து விழுந்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்?

கோலா திரெங்கானு பாஸ் எம்பி, ராஜா கமருல் பஹ்ரேன் ஷா ராஜா அஹமட் இக்கேள்வியை முன்வைத்துள்ளார். இவ்வாண்டில் மட்டும் மூன்று தடவை இப்படிக் கூரைகள் இடிந்து விழுந்துள்ளன என்றாரவர்.

நேற்றுக் காலை கோலா நெருஸ், கம்போங் தெபாக் பள்ளிவாசலில் கூரை இடிந்து விழுந்தது. இது போன்ற சம்பவங்கள் பல நடந்தும் இதுவரை எவரும் நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டதில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

“இது,  நாமே இப்படிப்பட்ட சம்பவங்களுக்கு ஊக்கமளிப்பதுபோல் உள்ளது.  கொஞ்சமாவது பொறுப்புடைமை இருக்க வேண்டாமா”. ராஜா பஹ்ரேன் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.