ஜிஎல்சி உயர் அதிகாரிகள் இருவர் போலிப் பட்டங்களை வைத்துள்ளனராம்

1-dapAஅரசுசார்ந்த நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் இருவர் வைத்துள்ள பல்கலைக்கழகப் பட்டங்கள் போலியானவை என எதிரணி எம்பி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அமைச்சர்கள் சிலர் போலிப் பட்டங்களை வைத்திருப்பதாக முன்பு கூறிய டிஏபி செர்டாங் எம்பி ஒங் கியான் மிங்தான் இப்போது இந்தக் குற்றச்சாட்டையும் சுமத்தியுள்ளார்.

அந்நிறுவனங்களின் வலைத்தளங்கள் அவ்விருவரில் ஒருவர் பிரிட்டனின் Oneborough பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் என்றும் மற்றவர் அமெரிக்காவின் பிரெஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டம் பெற்றவர் என்றும்  கூறுவதாக ஒங் தெரிவித்தார்.

பிரெஸ்டன் பல்கலைக்கழகத்தில்தான் மனிதவள அமைச்சர் ரிச்சர் ரியோட் போலி முதுநிலை பட்டம் பெற்று வைத்துள்ளார் என முன்பு ஒங் குற்றம் சாட்டினார்.  அக்குற்றச்சாட்டை ரியோட் மறுத்தார்.

இந்நாட்டு அமைச்சர்களையும்  இதர உயர்மட்ட அதிகாரிகளையும் பற்றி எதைக் கூறினாலும், எதைக் கேட்டாலும் மௌனம்தான் பதில். இது இந்நாட்டின் மிக உன்னதப் பாரம்பரியம்.

இந்நாட்டின் தலைமை நீதிபதியை ஒரு பொய்யர் என்று அவரின் முகத்தில் அறைந்தவாறு வழக்குரைஞர் கர்பால் சிங் பகிரங்கமாக, உலகமே அறிய கூறினார். என்ன ஆயிற்று?

அந்த தலைமை நீதிபதி பதவி ஓய்வு பெற்று இன்னும் நல்ல பதவியில் அமர்ந்திருக்கிறார். மானமாவது? மரியாதையாவது?

TAGS: