அண்மையில் கொண்டுவரப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத் திருத்தங்களை எதிர்த்து வாக்களிக்காத மசீச, கெராக்கான் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் “திண்ணைப்பேச்சு வீரர்கள்” என்று டிஏபி சாடியது.
அவ்விரு கட்சித் தலைவர்களும் நாடாளுமன்றத்துக்கு வெளியில்தான் செய்தியாளர் கூட்டங்களில் எதிர்ப்புக் காட்டிப் பேசுவதிலும் அறிக்கைகள் விடுவதிலும் துணிச்சலைக் காண்பிப்பார்கள் என தைப்பிங் எம்பி இங்கா கொர் மிங் கூறினார்.
“ஆனால், நாடாளுமன்றத்துக்கு வந்ததும் ஆமாம்-சாமி போடத் தொடங்கி விடுவார்கள்”, என்றாரவர்.
இதில் அதிசயம் ஒன்றுமில்லை/இதுதான் காலம் காலமாக நடக்கும் நாடகம் தானே? இவன்களின் வங்கி கணக்கு ஏறிக்கொண்டே போகும்
கெராக்கான் ,mca , ம இ கா நிலைக்கு தள்ளபட்டுள்ளது !
இந்திய சமூகம் இன்று ரவுடித்தனம் நிறைந்த இனமாக மாறியதற்கு மலாய்க்காரர்கள் மட்டுமின்றி சீனர்களும் முக்கிய காரணமாக விளங்குகின்றனர். அரசாங்கம் மட்டுமின்றி சீன நிறுவனங்களும் இந்தியர்களுக்கு கௌரவமான வேலையை வழங்க முன்வரவில்லை. அடாவடித்தனங்கள் புரிவதற்கும் ஆ லோங் வேலை பார்ப்பதற்கும் அரை போத்தல் பீரை கூலியாக கொடுத்து நமது இனத்தை நாசப்படுத்தியவர்கள் இந்த சீனர்கள். ஜசெக குற்றச்செயல் தடுப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது சுயநலத்திற்கே என்பதை நாடு அறியும்.
தின்னைத்தூங்கி MP-க்கள் .
கணபதி எழுத்தில் உண்மை இருக்கிறது.
மசீச, கெரக்கான், மஇகா மட்டும் அல்ல டிஎபி , பிகேஆர் , பாஸ் என்ற எல்லா கட்சிகாரங்களும் வாய் வீட்சி வீரர்கள்தான். மக்களுக்கு பிரச்னை பாதிப்பு என்று அரசு கொண்டு வரும் திட்டங்களை ஒட்டு மொத்தமாக எதிர்க்க வக்கில்லாமல் மக்களவையில் அமைதி காத்து விட்டு வெளியே பத்திரிகை அறிக்கை விடுவார்கள்.அம்னோ காரன் அமைதியாக இருப்பான் ஆனா மத்த கட்சிக்காரனும் அமைதியாக இருக்கானே? இவர்கள்தான் மக்கள் சேவையாளர்கள்?
கணபதி சார், மற்றவர்களை குறைசொல்லியே காலத்தை விரயமாக்காதீர்கள் . நம்ம பிள்ளைகள் கெட்டுபோவதற்கு நாம்தான் காரணம் , பெற்றோகளை சொல்கிறேன். அவன் கெடுத்தான் இவன் கெடுத்தான் என்பதெல்லாம் வெறும் வரட்டுப்பேச்சு . புலி புல்லை தின்னுமா ? மாடு மாமிசம் சாபிடுமா ? நம்ம ஆளு எல்லாத்தையும் செய்வான் , தவறு வந்தால் மற்றவரை குறைசொல்வான் , பலிபோடுவான். நாம் நாமாக இருந்தால் எவனும் எதையும் புடுங்கமுடியாது .
ரஜூலா சும்மா அப்படியே அடுக்கு மொழியில போட்டுத் தல்லனீங்க.
rajulla correcta sonninga..
ராஜுள்ள அருமயான கருத்து
நம்ம இனம் எப்போது???
சீரியல் பார்க்கவே நேரம் சரியா இருக்கு . என் புள்ளைங்க எங்க போன எனக்கு என்ன ….
நம்மவர்கள் நாலு பேரும் ஐந்தாவது பிற இனத்தவனனாலும், நம்மவர் நாலு பேரும் அந்த ஐந்தாவது நபரை தானே தலைவராக்குவர். எனது 65 ஆண்டு அனுபவத்தில் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் நம்மவரை காட்டிக்கொடுத்து சிக்க வைபவர்கள் நம்மவரே. குற்றம் புரிவோரை அடையாளம் காண்பிப்பது தவறில்லை அனால் அற்ப சலுகைக்காக குற்றமற்றவரை குற்றவாளியென பொய் சொல்லி மாட்டவைபதில் ஞாயம் உண்டா? அடுத்தவரை குறை கூறியே நமது குறைதனை மறைக்க முயல கூடாது. குற்ற செயல்களில் ஈடுபடும் இளையோரின் பெற்றோர் பக்கம் நமது பார்வையை சிறிது திருப்பினால் நலம் பயக்கும். பெரும்பாலான இத்தகைய பெற்றோரும் இப்படிதான் இருந்திருப்பர்/ இருப்பர். நண்டு தனது பிள்ளையை பார்த்து நேராக நடக்க சொன்ன கதையாகிவிடும். எவ்வித சவால்களையும் நாம் சமாளிக்க முடிவெடுக்க வேண்டும். கற்றவருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு என்பதற்கு ஏற்ப எப்பாடு பெற்றாவது நமது பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க முயற்சி எடுக்கவேண்டும். அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவ அனேக நல்லுங்கள் இருக்கிறார்கள். நமது கடமையை மட்டும் செய்தால் கூட போதுமனாதாகும். உதவிகள் நம்மை தேடி வரும். பெற்றோரே நம்முடைய கடந்தகாலம் எப்படி இருந்திருப்பினும் நமக்கு பின் வரும் சந்ததியினரின் நலன் கருதி செயல் படுவோம். நம்முடைய முன்னோர் நமது நலன் கருதியே தத்தம் சுகம் மறந்து தம் நாட்டை விட்டு இந்நாடு வந்தனர். நாமும் நமது பிள்ளைகளுக்காக சிறிது தியாகம் செய்வோம். நம்மையும் நமது நாட்டையும் இறைவன் வெகுவாக ஆசீர்வதிப்பாராக.
என்னதான் மற்ற இனத்தவர்கள் நம்மை ரவுடிகளாக ஆக்கி விட்டிருந்தாலும் நமது சுய சிந்தனை சரிவர செயல்பட்டால் நாம் நிச்சயமாக அதிலிருந்து விடுபட முடியும். இதில் பெற்றோர்களின் பங்கு அளப்பரியது என்பதை மறுக்க முடியாது. ஆனாலும் இதில் ஒரு சில பெற்றோர்களாலேயே கெட்டுப்போகும் பிள்ளைகளை பற்றி என்ன சொல்வது.