கே-போப் நிகழ்ச்சிக்கான செலவு இப்போது ரிம67 மில்லியன்!

 

k - popஹரி பெலியா 2012 நிகழ்ச்சிக்கு இளைஞர் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சு செய்த செலவு நீண்டு கொண்டே போகிறது, ஜூனில் ரிம55 மில்லியனாக இருந்தது இப்போது ரிம67.61 மில்லியனாக நீண்டு இருக்கிறது.

“ஆதரவு செயல்திட்டம்” என்ற தலைப்பில் ரிம12.61 மில்லியன் செலவு செய்யப்பட்டிருப்பது தேசிய கணக்காய்வாளர் அறிக்கையிலிருந்து தெரிய வருகிறது என்று டிஎபி புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சிம் கூறினார்.

கீழ்த்தரமாக விமர்சிக்கப்பட்ட இந்த கே-போப் நிகழ்ச்சிக்கு முதலில் கூறப்பட்ட ரிம15.2 மில்லியன் செலவு எப்படி நிம55 மில்லியனுக்கு உயர்ந்தது என்பதற்கு விளக்கம் அளிக்குமாறு கைரி ஜமாலுடினை கடந்த ஜூன் மாதத்தில் சிம் கேட்டிருந்தார்.

இதற்கு முன்பு கே-போப் நிகழ்ச்சிக்கான ரிம1.6 மில்லியனை தனிப்பட்ட ஏற்பாதரவாளர்கள் கொடுத்ததாக  கூறப்பட்டது.DAP - Steven Sim ஆனால், தேசிய கணக்காய்வாளர் அறிக்கை அத்தொகை அமைச்சு கொடுத்ததை வெளிப்படுத்தியுள்ளது.

ஆனால், இந்த அமைச்சின் முன்னாள் மந்திரி அஹமட் ஷபெரி சிக் செலவு செய்யப்பட்ட பணம் தனியார்கள்தான் கொடுத்தனர் என்று உறுதியாக கூறியுள்ளார்.

ஆகவே, இந்நிகழ்ச்சிக்கான செலவு கூடியதற்கான முழு விபரத்தையும் இந்த அமைச்சுக்கான அமைச்சர் கைரி ஜமாலுடின் அளிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை சிம் மீண்டும் வலியுறுத்தினார்.

தமக்கு இன்னொரு கேல்வியும் இருப்பதாக கூறிய அவர், “அமைச்சால் இன்னும் மறைக்கப்பட்ட செலவுகள் ஏதேனும் “இருந்தால் அதையும் வெளிப்படுத்தவும்”, என்றார் சிம்.

 

 

 

 

 

TAGS: