கடந்த ஆண்டு தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்தின்போது K-Pop இசை நிகழ்ச்சிக்கு ரிம1.6 மில்லியன் செலவிடப்பட்டதற்குப் பொறுப்பேற்றதற்காக இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடினுக்குப் பாராட்டுத் தெரிவித்த பிகேஆர் ஸ்ரீசித்தியா சட்டமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அஹ்மட், அடுத்த ஆண்டு அறிக்கையிலாவது இதுபோன்ற தேவையற்ற செலவினங்கள் இடம்பெறாமல் அமைச்சர் பார்த்துக்கொள்வாரா என்று கேள்வி எழுப்பினார்.
K-Pop இசை நிகழ்ச்சி நடந்தது அஹ்மட் சப்ரி சிக் இளைஞர் விளையாட்டு அமைச்சராக இருந்தபோது. கைரி இவ்வாண்டு மே மாதம்தான் அந்த அமைச்சுக்குப் பொறுப்பேற்றார். ஆனாலும்கூட தமக்கு முன் இருந்தவர் செய்த செலவுகளுக்கு கைரி பொறுப்பேற்றார்.
“2013-இல் இதுபோன்ற கேள்விக்குரிய செலவினங்களை அமைச்சு செய்யாது என்பதற்கு அமைச்சர் உத்தரவாதம் அளிப்பாரா என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்”, என நிக் நஸ்மி கூறினார்.
பொறுபேற்றார் ஏற்றால் என்ன அர்த்தம் ? தவறு நடந்துவிட்டது ,மன்னியுங்கள் என்றால் எல்லாம் முடிந்து விட்டதா ? விடக்கூடாது , விடவும் முடியாது . A Z விசாரணை செய்து , இடை தரகர்கள் யார் யார் ? என்பததை கண்டறியவேண்டும் . MACC யின் கடமை இது !!
அப்படி உறுதி கூறினால் விட்டு விடலாமா? உறுதி கூறிய பின் அடுத்த முறையும் இப்படி ஏதாவது நடந்தால்? 20 காசு பெட்ரோல் லை ஏறிய பின் விலவாசி எகிறிப் போச்சு. என்னத்த புடுங்கிட்டோம்?