கடந்த ஆண்டு கணக்கறிக்கையின்படி, காலமான பின்னரும்கூட பலருக்கு சமூகநல உதவியும் வீட்டு வசதியும் வழங்கப்பட்டு வந்திருக்கிறது.
நெகிரி செம்பிலான் சமூக நலத் துறை 2008-க்கும் 2012-க்குமிடையில் இறந்துபோன 40 பேருக்குத் தொடர்ந்து பண உதவி செய்து வந்துள்ளதாக 2012 தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை கூறுகிறது.
பினாங்கு முனிசிபல் மன்றம் (எம்பிபிபி), இறந்துபோன 240 பேருக்கு தொடர்ந்து வீட்டு வசதியை வழங்கி வந்திருக்கிறது.
சமூக நல உதவிபெற்று இறந்தவர், அவர் குடும்பம் நிட்சயமாக ஏழ்மையில் வாடும் குடும்பமாகதான் இருக்கவேண்டும் . மனசாட்சி உள்ளவர் எவரும் அதை தவறு ,தண்டிக்கவேண்டும் என்று கூறுவதற்கு முன்வரமாட்டார். அதேபோல்தான் இறந்தவர் குடும்பத்திற்கு வீட்டு வசதி , வீன் விரயமாகவில்லை. ஏழைமக்கள் அனுபவவிதார்கள்! ஆனால் மில்லியன் போய் பில்லியன் அடித்த கோட்டு சூட்டு போட்ட முதலைகள் தன் வாயில் போட்டு விழுங்கியதை வயிற்றில் ஏறி மிதித்து – மீண்டும் வாய் வழியே மக்கள் பணத்தை எடுக்க வேண்டும் . எல்லா NGO களும் ஓன்று திரண்டு மீண்டும் ஒரு புரட்சியை உண்டாக்க வேண்டும் !!
சமூக நலத்துறையில் பணிபுரியும் ஒருவர் சொன்னது: மாதா மாதம் ஏழை ஒருவர் சமூக நலத்துறையில் பணம் பெற கோட் சூட்டுடன் மேர்சீடிஸ் காரில் வந்து பணம் வாங்கிப் போவாராம்! இப்படியும் ஒரு ஏழை!
எல்லாம் அவர்கள் “அந்த உலகத்திலாவது” சந்தோசமா வாழட்டும் என்ற நல்ல எண்ணத்தால் பா ! சும்மா ஏன் சத்தம் போட்டுட்டு கிடகரீங்க?
உண்மையான ஏழைகளுக்கு உதவி மறுக்கப் படுகிறது.. போய் பழனியை கேள் என்று நையாண்டி செய்கிறார்கள்.. ஆனால் 40 ஆவிகளுக்கு படியளந்திருக்கின்றார்கள்..மோசமான ஊழல்..