வீட்டுப் பணி தொழிலாளர்களுக்கு எதிரான செயல்கள் கொடூரமாகிக் கொண்டிருக்கின்றன, ஐரின் பெர்னாண்டிஸ்

Tenaganita - Domestic workersவீட்டுப் பணி தொழிலாளர்களுக்கு எதிரான செயல்பாடுகளின் கொடூரம் அதிகரித்துக் கொண்டு வருவதோடு உயிருக்கு மருட்டலாகவும் இருக்கிறது என்று தெனகானித்தாவின் செயல்முறை இயக்குனர் ஐரின் பெர்னாண்டிஸ் கூறுகிறார்.

கடந்த ஆண்டில், 96 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றாரவர்.

“இத்தொழிலாளர்கள் கம்போடியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாட்டை சேர்ந்தவர்கள். காப்பாற்றப்பட்டவர்களில் 56 விழுக்காட்டினர் உடல் புண்படுத்தலுக்கும், 35 விழுக்காட்டினர் பாலியல் துன்புறுத்தலுக்கும், 30 விழுக்காட்டினர் உணவுப் பற்றாக்குறையால் ஏற்பட்ட ஊட்டமின்மையாலும் பாதிக்கப்பட்டிருந்தனர்”, என்று பினாங்கு பிளஸாவில் இன்று தொடக்கி வைக்கப்பட்ட வீட்டுப் பணி தொழிலாளர்களுக்கு தக்கமுறையான வாழ்க்கை என்ற பரப்புரை நிகழ்ச்சியில் ஐரின் கூறினார்.

இந்நிகழ்ச்சியை வீட்டுப் பணி தொழிலாளர்கள் பரப்புரை கூட்டணி என்ற அமைப்பின் சார்பில் ஐரின் கலந்து கொண்டு பேசினார். பினாங்கு இளைஞர், விளையாட்டு, மகளிர், குடும்பம் மற்றும் சமூகம் ஆகியவற்றுக்கான ஆட்சிக்குழுவின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.