அம்னோ உதவித் தலைவர் பதவிகளுக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் தொலைக்காட்சியில் விவாதமிடுவது தேவையற்றது என்று நினைக்கிறார் ஹிஷாமுடின் உசேன்.
அது பற்றிக் கருத்துரைத்த நடப்பு உதவித் தலைவர்களில் ஒருவரான ஹிஷாம், “உலகம் கூடி அம்னோ தலைவிதியை முடிவு செய்யப்போவதில்லை. அம்னோ உறுப்பினர்கள் அத்தனை பேரும்கூட வாக்களிக்கப் போவதில்லை”, பிறகு எதற்கு இந்த விவாதம் என்று ஒதுக்கித் தள்ளினார் என பெரித்தா ஹரியான் கூறிற்று.
ஆனால், கெடா மந்திரி புசாரும் அம்னோ உதவி தலைவர் பதவிக்கான வேட்பாளர்களில் ஒருவருமான முக்ரிஸ் மகாதிர், தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொள்ள தாம் தயார் என்று கூறினார்.
வேட்பாளர்களுக்குத் தொலைக்காட்சி விவாதம் என்ற கருத்தை முன்வைத்தவர் அம்னோ மூத்த உறுப்பினரான மூசா ஹித்தாம்.
விவாத்திக்கும்போது நீ மேற்கொள்ளும் பதவிக்கு தகுதியானவனா இல்லையா என்பது விளங்கிவிடும் . தலைக்குள் மூளையிருந்தால் அருவி போல் வந்து கொட்டும் . அம்னோக்காரனுக்கு உடலேங்கிலும் மூளை ! அதற்குப் பெயர் மூளையில்லை ! கொழுப்பு !! ஓர் நல்ல உதாரணம் , இப்போதைய உள்துறை அமைச்சர் ! குரங்கு கையில் பூமாலைப் போல் அம்னோக்காரனிடம் மாட்டிக்கொண்டதடா இந்தப் புண்ணியபூமி ! ஏதாவதொரு அதிசயம் நிகழ்ந்தாலொழிய இந்த நாடு விமோசனம் அடைய வழியே இல்லை !
மகாதிர் மாமா குட்டி முக்ரிஸ் குட்டிக்கு நிறைய பயிற்சிகள்
கொடிதிருப்பார்???
இந்த அம்னோ உதவி தலைவர் தேர்தலில் ஹிஸாம் முடின் கதை முடிகிறது? அடுத்த ஆண்டு 2014 இல் முஹைதீன் பிரதமர் , முக்ரிஸ் துணை பிரதமர் உறுதி செய்யப்பட்டு மாமா மகாதிர் அழகாக காயை நகர்த்தி வருகிறார்?