வாங்க! தமிழில் பேசுவோம்! – சொல்வேந்தர் மையம்!

3d human give a lecture behind a podium‘டோஸ்ட் மாஸ்டர்ஸ்’ என்றால் தோசை சுடுபவர்தான் ஞாபகம் வரும். ஆனால் டோஸ்ட் மாஸ்டர்ஸ் என்பது மேல்குடி மக்கள் ஆங்கிலத்தில் அழகாக அரட்டை அடிக்க உண்டாக்கப்பட்ட ஒரு சமூகக் குழுவாகும். இதில் பங்கு பெற்றவர்கள்  தங்களது பேச்சாற்றலை வளர்த்துக்கொண்டனர்.

1924 இல் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்ட ‘டோஸ்ட் மாஸ்டர்ஸ்’ இன்று ‘சொல்வேந்தர் மையம்’ என்ற பெயருடன் தமிழில் பேச ஆசைப்படும் மக்களுக்கு உதவ மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தன்னம்பிக்கையுடன் தரமான வகையில் தமிழில் உரையாட சொல்வேந்தர் மையம் உங்களை அழைக்கின்றது.

அச்சப்படத்தேவையில்லை, தமிழ் சரியாக வாயில் நுழையவில்லை என்றாலும் பரவாயில்லை, ஆர்வம் இருந்தாலே போது நீங்களும் தமிழில் பேசலாம் என்கிறார் சொல்வேந்தர் மையத்தின் தலைவர் முனைவர் திலகா செல்லையா.

“வாருங்கள், வந்து கலந்து கொள்ளுங்கள் என அழைக்கிறார்”

தேதி : 12 அக்டோபர் 2013 (சனிக்கிழமை), இடம் : சுத்த சமாஜம் (Pure Life Society),  6-வது மைல், ஜலான் பூச்சோங், 58200 கோலாலம்பூர். நேரம் : மதியம் 2.30 முதல் மாலை 4.30 வரை; தொடர்புக்கு  : முனைவர் திலகா செல்லையா 012-2810735;  ஷமளா செல்வதுரை 017-6609945; தனுஷா 012 – 6026015

நுழைவுச் சீட்டு இலவசம். ஆனால் முன்பதிவு முக்கியம். பதிவு செய்வதற்கான இறுதி நாள் 9 அக்டோபர் 2013.