குண்டர் கும்பலுடன் பிஎன்னுக்கு தொடர்பு உள்ளது என்று ஜாஹிட் ஒப்புக் கொண்டதை போலீஸ் விசாரிக்க வேண்டும்

 

Minister Zahid, Ambiga1கடந்த சனிக்கிழமை மலாக்கா, ஆயர் கெரோவில் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஸாகிட் ஹமிடி ஆற்றிய சர்சைக்குரிய உரையில் பிஎன்னுக்கும் குண்டர் கும்பல்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளதின் அடிப்படையில் ஆயர் கெரோ சட்டமன்ற உறுப்பினர் கூ போஏ தியோங் போலீஸ் புகார் செய்துள்ளார்.

அவரது உரையின் ஒரு கட்டத்தில் பாரிசான் கூட்டணி கட்சிகள் – அதாவது மஇகா, பிபிபி, ஐபிஎப். மசீச மற்றும் கெராக்கான் – எவ்வாறு குண்டர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தில் தலையிட முயற்சித்தன என்பதை நாளிதழ்களில் வெளிவராத வகையில் பேச விரும்புவதாக கூறினார்.

அவருடைய உரையின் பதிவைப் பெற்றிருந்த போதிலும், ஸாகிட் கேட்டுக் கொண்டதற்கிணங்க இவ்விவகாரம் சம்பந்தப்பட அவரது உரை அடங்கிய பகுதியை மலேசியாகினி நேற்றைய தினத்திலிருந்து வெளியிட்ட தொடர் Zahid8செய்திகளிலிருந்து ஒதுக்கியிருந்தது.

Zahid9ஆனால், கூ செய்திருக்கும் போலீஸ் புகாரின் ஒரு பகுதியில் ஸாகிட்டின் இந்த உரை அடங்கியிருப்பதாலும், போலீஸ் புகார் ஒரு பொது ஆவணம் என்பதாலும் மலேசியாகினி அப்பகுதி உரையை வெளியிடுகிறது.

Dulu gangster kena tangkap, akan dapat surat daripada pemimpin parti komponen Barisan Nasional atau wakil rakyat meminta untuk melepaskan gangster-gangster tersebut. Antara Parti komponen yang terlibat iaitu MIC, PPP, IPF, MCA, Gerakan.

(முன்பு குண்டர்கள் கைது செய்யப்பட்ட போது பிஎன்னின் அங்கத்துவ கட்சி தலைவர்கள் அல்லது பிரதிநிதிகளிடமிருந்து  குண்டர்களை விடுவிக்கக் கோரும் கடிதங்கள் வரும். சம்பந்தப்பட அங்கத்துவ கட்சிகளில் மஇகா, பிபிபி, ஐபிஎப், மசீச மற்றும் கெராக்கான் ஆகியவை அடங்கும்.)

ஸாகிட்டின் உரை அரசியல்வாதிகள் போலீசாரின் நடவடிக்கைகளில் தலையிடுகின்றனர் என்பதை நிரூபிப்பதற்கு சாட்சியமாக பயன்படுத்தலாம். இது சட்டத்திற்கு எதிரானது என்பது தெள்ளத்தெளிவாகும்.

“இந்த பாரிசான் தலைவர்களுக்கும் குண்டர்களுக்கும் இடையிலான உறவுகள் என்ன என்பதையும் போலீசார் விசாரிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்”, என்று தொடர்பு கொண்ட போது கூ மலேசியாகினியிடம் கூறினார்.

 

 

 

 

TAGS: