ஜாஹிட்டுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கவியலாது

zaidibrahim400px_400_270_100உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி, சந்தேகத்துக்குரிய குற்றவாளிகளைக் “கேள்வி கேட்காமல் சுடலாம்” என்றுரைத்தது சட்டமுறைக்குப் புறம்பானது என்றாலும்கூட அமைச்சர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் சாத்தியமில்லை.

ஜாஹிட் அரசாங்கக் கொள்கையைத்தான் விவரித்திருக்கிறார் என்பதால் அதற்காக அவர்மீது சட்டநடவடிக்கை எடுக்க வியலாது என முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட் இப்ராகிம் கூறினார்.

“சட்டநடவடிக்கை சரியானதாக, சாத்தியமானதாக எனக்குத் தோன்றவில்லை. அரசாங்கக் கொள்கையைத்தான் அவர் எடுத்துரைத்தார்”, என மலேசியாகினியிடம் ஜைட் கூறினார்.

அஹமட் ஜாஹிட் ஹமிடி உள்துறை அமைச்சர் என்ற முறையில் “கேள்வி கேட்காமல் சுடலாம்” என்று கூறியது அரசாங்கத்தின் கொள்கை என்றால் அது அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ளது என்று கூறலாம்.  அப்படி என்றால், ஹமிடி அரசாங்கத்தின் கொள்கையை அமல்படுத்தியதற்கு பொறுப்பேற்க வேண்டும். இது அமைச்சரரை உறுப்பினர்களின் “கூட்டான பொறுப்பு”  (Collective responsibility) ஆகும். அமைச்சரவையின் ” கேள்வி கேட்காமல் சுடலாம்” என்று முடிவை ஹமிடி ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அவர் அமைச்சரவை உறுப்பினர் பதவியைத் துறந்திருக்க வேண்டும். அவர் அங்கே இருந்து வருகிறார். நிரந்தரமாக அங்கேயே இருக்க தற்போது பிரச்சாரம் செய்து வருகிறார்.

ஆகவே, ஹமிடி அமைச்சரவை உறுப்பினர் என்ற முறையில் அரசாங்கத்தின் கொள்கையைப் பிரதிநிதித்து கேள்வி கேட்காமல் சுடச் சொல்கிறார்.  அதற்கு அவரை அரசாங்கத்தின் சார்பில் பொறுப்பேற்க வைக்க வேண்டும். சட்ட நடவடிக்கை தேவைப்படுகிறது.

இல்லை என்றால், இருக்கவே இருக்கிறார் மௌனவாதி பிரதமர் நஜிப். அவரை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.  தவறான,  சட்ட விரோதமான ஒன்றை  செய்யச் சொல்லி விட்டு அரசாங்கம் வேறு அமைச்சர் வேறு என்று கூறி தப்பிக்க இடம் கொடுக்கக் கூடாது.