அண்மையில் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குற்றத்தடுப்புச் சட்டத்தை நிர்வகிக்கும் அதிகாரம் போலீசுக்கு இல்லை என இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் கூறினார்.
கொடூரமானது என்று வருணிக்கப்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட(ஐஎஸ்ஏ)த்தினின்றும் பிசிஏ மாறுபட்டது.
“ஐஎஸ்ஏ அரசாங்கத்துக்கு முழு அதிகாரத்தை அளித்தது, பிசிஏ அந்த அதிகாரத்தை நீதித் துறைக்கும் பரிசீலனை வாரியத்துக்கும் வழங்குகிறது.
“கைது செய்யப்பட்டவுடன் முதல் 24-மணி நேரம்தான் போலீஸ் காவலில் வைத்திருக்க முடியும். அதனை அடுத்து ஒரு மெஜிஸ்திரேட் உத்தரவிட்டால் மட்டுமே 21 நாள்களுக்குத் தடுத்துவைக்க முடியும். பின்னர் மேலும் 38 நாள்களுக்குத் தடுக்க வைக்க வேண்டுமானால் செஷன்ஸ் நீதிமன்றத்தின் ஒப்புதல் வேண்டும். அதன்பிறகு செய்ய வேண்டியதை வாரியம் தீர்மானிக்கும். இந்த நடைமுறைகளில் திருப்தி இல்லையென்றால் நீதிமன்றத்துக்குச் செல்லலாம்”, என்று காலிட் கூறினார்.