திரெங்கானுவா, டாருல் ருந்தோ(‘Darul Runtuh’)வா?

runtohதிரெங்கானுவில் நல்லாட்சி ஏற்படும்வரை அம்மாநிலம் டாருல் ருந்தோ என்றே அழைக்கப்படும் என பாஸ் கூறியுள்ளது.

கோலா திரெங்கானு எம்பி ராஜா கமருல் பஹ்ரேனும் பத்து பூரோக் சட்டமன்ற உறுப்பினர் சைட் அஸ்மான் சைட் நவாவியும் விடுத்துள்ள கூட்டறிக்கையில்,  கடந்த இரண்டு தவணைகளாக பிஎன் ஆட்சியில் உள்ள அம்மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் கட்டிடங்கள் இடிந்து விழுந்திருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

2008-இலிருந்து 15-தடவை கட்டிடங்கள் இடிந்து விழுந்த சம்பவங்களை அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

“தெரிந்தவர்கள் என்பதற்காக குத்தகைகள் தகுதியற்றவர்களுக்குக்  கொடுக்கப்படுவதால்தான் கட்டிடங்கள் இடிந்து விழுகின்றனவா?”, என்றவர்கள் வினவினர்.

கட்டிடங்கள் இடிந்துவிழும் சம்பவங்களால் திரெங்கானுவில் தோற்றம் “களங்கமடைந்துள்ளது” என்றவர்கள் குறிப்பிட்டனர்.