பாடாங் ரெங்காஸ் அம்னோ தொகுதியில் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீசை எதிர்த்துப் போட்டியிடவிருந்த ஷாகிடான் யூசுப், வேட்பாளர் பட்டியலிலிருந்து தூக்கப்பட்டது ஏன் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறார்.
தேசிய வீடமைப்பு மன்றத்தின் முன்னாள் செயலாளரான ஷகிடான், வேட்பாளர் பட்டியலிலிருந்து தம் பெயர் நீக்கப்பட்டிருப்பதை ஊடகங்களிலிருந்துதான் தெரிந்துகொண்டதாகக் கூறினார்.
“கட்சித் தலைமையகத்திடமும் மாநிலத் தலைமையகத்திலும் அதற்கான காரணத்தைக் கேட்டேன், பயனில்லை”, என்றாரவர்.
“காரணம் எதுவும் இல்லாத நிலையில் மக்கள் என்னை நொடித்துப்பொனவனாகவோ, முன்னாள் குற்றவாளியாகவோ, கட்சி விதிமுறைகளை மீறியவனாகவோ நினைத்துக் கொள்வார்கள். எனவே, என்னைப் பற்றி தப்பான கருத்து உருவாவதைத் தடுக்க காரணம் கூறப்பட வேண்டும்”, என்றாரவர்.
இதுதான் ஆப்பு ! உனக்கே ஆப்பு என்றால் , எங்கள் நிலை ? நினைத்துப்பார் ,
இந்த மர மண்டயனுக்கு இப்பொழுது புரிந்தால் சரி “”
அன்வார் கிட்டே கேளு.. அவர் சொல்லுவார்..