‘போலீசாரின் உரிமைகள், குற்றச்செயல்களால் பாதிக்கப்படுவோரின் உரிமைகள் என்னாவது?’

ahmad jahid“முதலில் சுடுவோம்” என்று கூறியதற்காக பலமுனைகளிலிருந்தும் சாடப்பட்டுவரும் உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி, தம்மைக் குறைகூறுவோர் குற்றச்செயல்களால் பாதிக்கப்படுவோரின் உரிமைகள் பற்றிக் கவலைப்படாதது ஏன் என்று வினவுகிறார்.

“போலீசாரின் உரிமைகள், கொள்ளையடிக்கப்படுவோர், கொலைசெய்யப்படுவோரின் உரிமைகள் என்னாவது?மனித உரிமை பாதுகாப்புக்குக் குரல் கொடுப்பவர்கள் இதை ஏன் பாதுகாப்பதில்லை? மனித உரிமை என்பது குற்றவாளிகளுக்கு மட்டும்தானா?”, என்றவர் டிவிட்டரில் கேள்விகளை அடுக்கியுள்ளார்.

அமைச்சரின் கூற்று மலேசியாவுக்கு அப்பாலும்கூட கண்டிக்கப்பட்டுள்ளது. அனைத்துலக மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு அவரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.