கெடா பொதுநல இலாகா உடல் ஊனமுற்றவர்கள் குழுவை சந்திக்க ஒப்புக் கொண்டுள்ளது

 

JKM-kedah 2கெடா மாநில பொதுநல இலாகா (ஜேகேஎம்) குதுணை இயக்குநர் I அஹமட் ரஷிட் உடல் ஊனமுற்றவர்கள் கொடுத்த மகஜரில் கூறப்பட்டுள்ள புகார்கள் குறித்து விவாதிப்பதற்காக அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஒரு கூட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

கடந்த 6 ஆம் தேதி,  கெடா, கூலிம் ஜேகேஎம் அதிகாரி ரொஹானா யுசுப் அவரது முதல் மாடி அலுவலகத்திலிருந்து கீழே வந்து உடல் ஊனமுற்றவர்களின் அமைப்பு கொடுக்க வந்த மகஜரை பெற்றுக் கொள்ள மறுத்து விட்டதால், அந்த அமைப்பின் குழு உறுப்பினர் ஞானப்பிரகாசன், நடக்க முடியாதவர், முதல் மாடிக்கு படிகளில் தவழ்ந்தே சென்று அவர்களின் மகஜரை ரொஹானவிடம் வழங்கினார்.

இச்சம்பவம் இலாகாவின் தோற்றத்திற்கு “பாதிப்பை” ஏற்படுத்து விட்டது என்பதை ஒப்புக் கொண்ட அஹமட், இதிலும் ஒரு நன்மை ஏற்பட்டுள்ளது என்றார். இது அந்த இலாகவின் கிளைகளில் காணப்படும் பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் மேலும் கூறினஅர்.

உடல் ஊனமுற்றவர்களின் குழுவுடன் வருகையளித்திருந்த பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் என். சுரேந்திரனுடன் தாம் தொடர்பு கொண்டு பேசியதாகவும் அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்ததாகவும் அஹமட் கூறினார்.

“அவர் (சுரேந்திரன்) மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி. எங்களுக்கு, எதிரணித் தலைவர், அரசு சார்பற்ற அமைப்புகள் அல்லது தனிப்பட்டவர்கள் ஆகியோரிடமிருந்து புகார்கள் கிடைப்பதில் பிரச்னை இல்லை. நாங்கள் அவற்றை கவனிப்போம்”, என்று அவர் மேலும் surenகூறினார்.

கால்கள் இல்லாவிட்டால் என்ன, பறந்து வந்து தாக்குவோம். உடல் ஊனமுற்றவர்களை உதாசீனம் செய்யாதீர்கள் என்று அரசு ஊழியர்களுக்கு சரியான பாடம் புகட்டியுள்ளார் ஞானப்பிரகாசன்.

அவ்வாறே, ஜேகேஎம் அதிகாரி அஹமட் ரஷிட்டும் எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் என். சுரேந்திரனை மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதியாக மதித்து அவருடன் தொடர் கொண்டது அரசு ஊழியர்களுக்கு ஒரு முன்மாதிரியாகும்.

 

 

 

 

 

TAGS: