சுங்கை லிமாவ் தேர்தல் பரப்புரையைப் புறக்கணிக்கும் துணிச்சல் மசீசவுக்கும் கெராக்கானுக்கும் உண்டா?

1-theresaமசீசவுக்கும் கெராக்கானுக்கும்  துணிச்சல் இருந்தால் அவை கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர்,  சீனப் பள்ளிகள் பற்றி அண்மையில் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்  சுங்கை லிமாவ் இடைத்தேர்தல் பரப்புரையைப் புறக்கணிக்க வேண்டும் என  டிஏபி சவால் விடுத்துள்ளது.

அவ்விரு பிஎன் கட்சிகளும்,  கெடா அரசு சீனப்பள்ளிகள் கட்டுவதற்கு விடுக்கப்படும்  கோரிக்கைகளைப் புறந்தள்ளும் என்றும்  13வது பொதுத் தேர்தலில் பிஎன்னை ஆதரித்தவர்களுக்கே  முன்னுரிமை   என்றும் முக்ரிஸ் கூறியிருப்பதைக் குறைகூறியுள்ளன.

“முக்ரிஸ் தமக்கும் பிஎன்னுக்கும் சீனர்களின் வாக்குகள் இனியும் தேவையில்லை என்று நினைக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது”, என டிஏபி சிபூத்தே எம்பி தெரெசா கொக் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

இந்நிலையில், எதிர்வரும் சுங்கை லிமாவ் இடைத் தேர்தலில்  பிஎன் தேர்தல் பரப்புரையைப் புறக்கணிப்பதன் மூலமாக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் துணிச்சல் மசீசவுக்கு கெராக்கானுக்கும் உண்டா  என்றவர் சவால் விடுத்தார்.