அன்வார் கலந்துகொண்ட டிபிபிஏ-எதிர்ப்பு நிகழ்வில் கூட்டம் குறைவு

1 anwarட்ரேன்ஸ்-பசிபிக் பங்காளித்துவ ஒப்பந்த(டிபிஏஎ)த்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு முன்னதாக, நேற்றிரவு ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வில் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கலந்துகொண்ட போதிலும் அந்நிகழ்வுக்கு வந்திருந்த கூட்டத்தினர் எண்ணிக்கை வருத்தமளிக்கும் வகையில் மிகக் குறைவாக இருந்தது.

13வது பொதுத் தேர்தலுக்குமுன் அன்வார் பேசுகிறார் என்றால், அவரது பேச்சைக் கேட்க மக்கள் ஆயிரக்கணக்கில், பல்லாயிரக்கணக்கில் திரண்டு வருவர். ஆனால், நேற்றைய நிகழ்வுக்கு 300-க்கும் குறைவானவர்களே வந்திருந்தனர்.

ஆனாலும், அந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்த பத்ருல் ஹிஷாம் ஷஹாரின் மனம் தளரவில்லை. இன்று பிற்பகல் கோலாலும்பூர் மாநாட்டு மையத்தில் (கேஎல்சிசி) நடைபெறும் டிபிஏஏ-எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் நிறைய பேர் கலந்துகொள்வார்கள் என்றவர் எதிர்பார்க்கிறார்.

“தேர்தலுக்குப் பின்னர், சமூக ஆர்வலர்களுக்கு செராமாக்களில் ஆர்வம் குறைந்துவிட்டது.

“பல நண்பர்கள் கூட்டத்துக்கு வரமுடியாது என்று ஏற்கனவே சொல்லி விட்டார்கள். ஆனால், ஆர்ப்பாட்டத்துக்கு வருவார்கள்” ,என்றாரவர்.