சிமிட்டி ஆலையால் சுற்றுச்சூழலுக்குக் கேடு என்ற குற்றச்சாட்டை ஒய்டிஎல் மறுக்கிறது

1 ytlகுயிருப்பாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள போதிலும்,  செந்தூலில்  எட்டாண்டுக் காலமாக  செயல்பட்டுவரும் சிமிட்டி ஆலையை  மூடவோ வேறு இடத்துக்கு மாற்றவோ  எண்ணவில்லை என ஒய்டிஎல் நிறுவனம் அறிவித்துள்ளது. .

மாற்றரசுக் கட்சியின் அரசியலுக்குத் தான் பலிகடா ஆக்கப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் கூறிற்று.

“எட்டாண்டுக் காலமாக செயல்பட்டு வந்திருக்கிறோம். ஏன் இப்போது பிரச்னை செய்கிறார்கள்?”,  என்று ஒய்டிஎல் மேம்பாட்டு நிறுவனமான  செந்தூல் ராயா சென். பெர்ஹாட்டின் பேச்சாளர்  முகம்மட் சைட் பானி வினவினார்.

பத்து எம்பி தியான் சுவா, செந்தூலுக்குள்ளும் வெளியிலும் சிமிட்டி ஏற்றிச்செல்லும் லாரிகளால் அங்குள்ள குடியிருப்பாளர்களின் உயிருக்கு அபாயம் ஏற்பட்டிருப்பதாகக்  கூறியிருப்பதற்கு எதிர்வினையாற்றியபோது  அவர் இவ்வாறு வினவினார்.  இரண்டு வாரங்களுக்குமுன் 30-வயது சித்தி ரொஹானி முகம்மட் சாஅடி, அவ்வாலையின் லாரி ஒன்றில் அடிபட்டு இறந்ததாகக் கூறப்படுகிறது.

1 tianதியான் சுவா, அவ்வாலை ஐந்து தொடக்க, இடைநிலை பள்ளிகள், ஒரு மார்க்கெட், குடியிருப்புகள்  ஆகியவற்றுக்கு அருகில் அமைந்திருப்பதாகக் குற்றம் சாட்டினார்.

அவ்வாலையிலிருந்து “வெளிப்படும்  சின்னஞ்சிறு துகள்கள் மூச்சிழுக்கும்போது நுரையீரலைப் பாதிக்கின்றன” என்பதால் அதை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றாரவர்.

“இயற்கைவள சுற்றுச்சூழல் அமைச்சு நாடு முழுக்க காற்றுத் தூய்மைக்கேடு குறித்து ஆய்வு நடத்துகிறது….கோலாலும்பூரில் தூய்மைக்கேட்டை ஏற்படுத்தும்  இந்த சிமிட்டி ஆலையைக் கவனிக்காதது ஏன்?  இப்படி ஒன்று செந்தூலில் இருப்பதாவது அவர்களுக்குத் தெரியுமா”,  என்று தியான் சுவா ஓர் அறிக்கையில் வினவியுள்ளார்.

ஒய்டிஎல் அதை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று கூறியுள்ளது.