அஹ்மட் ஜாஹிட் ஹமிடியைப் பிரதமராகும் வாய்ப்புள்ளவர் என வருணித்த முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட் இப்ராகிம், அவரின் பேச்சில் குறை கண்டால்கூட அதைச் சுட்டிக்காட்ட அஞ்சி வாயைப் பொத்திக் கொண்டிருப்போரைச் சாடினார்.
“உதய நட்சத்திரத்தைப் பகைத்துக்கொள்ள எவருக்கும் துணிச்சலில்லை. நாடு போலீஸ் ராஜ்யமாக மாறும் அபாயத்தை நெருங்கிக் கொண்டிருப்பது பற்றி அவர்கள் கவலைப்படவில்லை”, என்றாரவர்.
“அறிவீனமாகவும் ஏறுமாறாகவும் அதே வேளை ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும்” பேசும் அமைச்சர்களை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அடக்கி வைக்க வேண்டும் எனவும் ஜைட் கேட்டுக்கொண்டார்.
குடிகாரன் பேசி விடிந்தால் போச்சி!!!
யாரு நஜிப்பா. அவனுக்கு உதட்டுக்கு சாயம் பூசவே நேரம் சரியாக இருக்கிறது.
சரியாக சொன்னிங்க ஜைட், உங்க மாதிரி ஒரு சில மலாய் தலைவர்களால் தான் எங்களுக்கு நம்பிக்கையே வருது. இவ்வளவு குறை கூறல்களுக்கு மத்தியுலும் பிரதமர் வாயை திறக்க மாட்டேன் என்கிறாரே ஏன்? தன்னுடைய வண்டவாளம் வெளியில் வந்துவிடும் என்ற பயமா? அல்லது ஐ ஜி பி க்கும் அவருக்கும் ஏதும் உடன்பாடா?