தன்மீது குறைகூறிய கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிருக்குப் பதிலடி கொடுத்துள்ள கெராக்கான், “உருட்டல், மிரட்டல்களையும்” “பழிவாங்கும் அரசியலையும்” சகித்துக்கொண்டிருக்க முடியாது என்று அறிவித்துள்ளது.
கெராக்கான் தலைமைச் செயலாளர் மா சியு கியோங், நேற்று கெராக்கான் கட்சி குறித்து எதிர்மறையான கருத்து தெரிவித்த பொதுக் கணக்குக் குழு(பிஏசி)த் தலைவர் நூர் ஜஸ்லான் முகம்மட்டையும் சாடினார்.
அம்னோ தலைவர்கள் சிலர், பிஎன்னுக்கு மக்கள் ஆதரவு குறைந்து போனதற்கு கெராக்கான், மசீச போன்றவைதான் காரணம் என்று கூறுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் என்றாரவர்.
“1999-இல் அன்வார் இப்ராகிம் காரணமாக மலாய்க்காரர்கள் பிஎன்னுக்கு எதிராக வாக்களித்தபோது அம்னோ தொடர்ச்சியாக மலாய்க்காரர்களைத் தாக்கவில்லையே. இன்னும் சொல்லப்போனால், மலாய்ச் சமூகத்தின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ஆதரவுகுறைந்ததற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றைச் சரிசெய்தது”, என மா குறிப்பிட்டார்.
ஆனால், அண்மைய தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து மலேசிய இந்தியர், சீனர் சமூகங்களிடம் அதேபோன்ற அணுகுமுறை கடைப்பிடிக்கப்படாதது ஏன் என்றவர் கேள்வி எழுப்பினார்.
ஆஹா, தூங்கிகிட்டு இருந்த கெரக்கான் என்ற சிங்கத்த எலுப்பிடாங்கப்பா, எழுபிட்டாங்க! பாவம் ம.இ.க. என்ற பூனை இன்னும் அடுப்படியில் தூங்கிகிட்டு இருக்கு. பட்டம் பதவி என்ற சூடு நல்ல சுகத்த குடுக்குதோ?
தேசிய முன்னணியில் உள்ள உறுப்பு கட்சிகள் அம்னோவுக்கு ஆதரவு தருவது சரி ஆனால் தங்களது சமூகங்களுக்கு ஏற்ப்படும் இன்னல்களுக்கு வாய்மூடி மவுனமாக இருந்தால் என்னாவது? முக்ரீசுக்கு கெரக்கான் தலைவர் பதிலடி கொடுத்ததுப்போல் கொடுத்தால்தான் அந்த மரமண்டைகளுக்கு புத்தியில் உரைக்கும் ? இனி இப்படியே தொடர வேண்டும்.
பித்தம் தலைக்கு ஏறி உலரும் umno காரன்களுக்கு நல்ல பதிலடி
கொடுங்கள் .ம இ கா காரன்களே உங்கள் கும்பகர்ண தூக்கதில்
இருந்து எழுந்து உங்கள் வாயை திறப்பீர்களா???
குட்ட குட்ட குனிந்தது போதுமென்று குரல் கொடுக்க துணிந்தமைக்கு நன்றி ! உங்களுக்காகிலும் கொஞ்சம் ரோசம் இருக்குதே !
நான் ஒரு தமிழன் ஆனால் எனது பாராட்டுகள் கெரக்கான்,மலேசியா சினர் கச்சிக்கு ஷபாஸ்,
மலேசியா இந்தியர் கச்சி சுகமா திடோர்……………