கேலி கூத்தாக்காதீர்: இந்திய குத்தகையாளர் அமைப்பு காட்டம்

najib tamil schoolகடந்த தேர்தலின் போது தமிழ்ப்பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு ரிம 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவற்றை கட்ட இந்திய குத்தகையாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 53 இந்திய குத்தககையாளர்கள் தங்களது டெண்டர்களை சமர்ப்பித்தனர்.

இவை சமர்பித்து 6 மாதங்கள் ஆகியும் இன்னமும் இழுப்பறியாகவே இருப்பதாகவும் மாறி ,மாறி விவரங்கள் வெளியிடப்படுகின்றன என்றும் இந்திய கட்டுமான சங்கத்தின் (Persatuan Pembina dan Kontraktor India Malaysia) செயலாளர் சிவா அவர்கள் தனது பத்திரிக்கை செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தற்சமயம் கல்வி இலாகா செய்ய வேண்டியது நேரடியாக குத்தககைக்காரர்களுக்கு குத்தகைகளை வழங்கவேண்டும் என்றும்  அதை விடுத்து விருப்பு கோரிக்கை கடிதங்களை அனுப்பி வைப்பது நியாயமான முறை அல்ல என்கிறார் சிவா. .

இந்த தமிழ்பள்ளிகளுக்கான குத்தகைகள் கல்வி இலாகா பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டவை அல்ல, அவை  பிரதமரின் சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் வழங்கப்பட்டது. இதில் நடப்பு கட்டுப்பாடுகளும் தகுதிகளும் இந்திய குத்தககைக்காரர்களுக்காக தளர்த்தப்பட்டது. எனவே முறையாக குத்தகைகளை மேலும் காலம் தாழ்தாமல் வழங்குவதே நியாயமாகும்.

“நமக்கு ஒரு துணை அமைச்சர் கல்வி அமைச்சில் வீற்றிறுக்கிறார். மேலும் 2 முழு அமைச்சர்கள் அமைச்சரவையில் அமர்ந்துள்ளனர். நாங்கள் குத்தகையாளர் மற்றும் கட்டுமான சங்கம் எதிர்பார்ப்பது என்னவென்றால் அரசியல் உட்கட்சி தேர்தலுக்காக இதனை பயன்படுத்துவதை தவிர்க்கவும்” என்கிறார் சிவா.

மேலும், “எங்களுக்கு தேவை நேரடி குத்தகை அழைப்பு. உறுதியில்லாத விருப்பு கோரிக்கையை நாங்கள் கேட்கவில்லை. இந்த மாதிரியான கேலி கூத்துக்களை நிறுத்தவும்” என்கிறார்.