பினாங்கு சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் இனி கோமாளித்தனங்கள் செய்து தப்பித்துக்கொள்ள முடியாது. அவர்களின் செயல்களைச் செய்தியாளர் குழு ஒன்று அணுக்கமாகக் கண்காணித்து மதிப்பீடு செய்யும்.
சட்டமன்றத்தில் இருந்து உறுப்பினர்களின் நடத்தையைக் கவனித்து வருபவர்கள் என்பதால் உறுப்பினர்களைக் கண்காணித்து அவர்களின் அடைவுநிலையை மதிப்பீடு செய்ய செய்தியாளர்களின் உதவி நாடப்பட்டது எனச் சட்டமன்றத் தலைவர் லாவ் சூ கியாங் தெரிவித்தார்.
“அரசியல் கட்சிகளின் உதவியுடன் மதிப்பிடுவதைவிட ஊடகங்களின் உதவியுடன் செய்யப்படும் மதிப்பீடு செம்மையானதாகவும் நேர்மையானதாகவும் இருக்கும்”, என்றாரவர்.
தீவிரமான கண்காணிப்புக்கு பிறகு எடுக்கப்பட்ட நல்ல முடிவு!! எதை சொன்னாலும் இன ரீதியாக செயல் படுகிறார்கள் என வாய்க் கூசாமல் சொல்லும் ஒரு கூட்டத்தினருக்கு நல்ல விளக்கமாக அமையும்??