‘முதலில் சுடுங்கள்’ என்று ஜாஹிட் கூறியது ஏன் என்று அரசு இன்னும் விளக்கம் கூறவில்லை

1 surenபிகேஆர்  உதவித் தலைவர் என்.சுரேந்திரன், தாம் போலீசாரின் சுடும் நடவடிக்கையில் கலந்துகொண்டாலும்கூட  உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி ‘முதலில் சுடுங்கள்’ என்று கூறியதற்கு விளக்கம் தராமல் தப்பித்துக்கொள்ள முடியாது என்றார்.

போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார், போலீஸ் நடவடிக்கையை நேரில் காண வருமாறு டிவிட்டரில்  அழைப்பு விடுத்திருந்ததை “ஒரு விதண்டா வாதம்” என்று வருணித்த சுரேந்திரன், “ஆனாலும் அதை நல்லெண்ணத்துடன் ஏற்றுக்கொண்டேன்”, என்றார்.

முதலில் சுடுங்கள் என்று ஜாஹிட் ஹமிடி கூறியதை  சுரேந்திரன் குறைகூறியதை அடுத்து காலிட் அவ்வாறு அழைப்பு விடுத்திருந்தார்.

“ஆனால், ஐஜிபி-இன் அழைப்பு  உள்துறை அமைச்சரின்‘முதலில் சுடுவோம்’ என்ற கொள்கையை நான்  குறைகூறியதற்கு விளக்கம் ஆகாது. ஐஜிபியும் அரசாங்கமும் நியாயமான விளக்கத்தைத் தருவார்கள் என்று மக்கள் காத்திருக்கிறார்கள்”, என்றாரவர்.

“நான் அவர்களின் நடவடிக்கையில் கலந்துகொள்கிறேனோ இல்லையோ, சந்தேகம் கொள்வோரைக் கண்ணை மூடிக்கொண்டு சுட்டுத்தள்ளுவதை உள்துறை அமைச்சும் போலீசும் நிறுத்திக்கொள்ள வேண்டும்”.

TAGS: