கேஎல்ஐஏ2 கிட்டத்தட்ட தயாராகி விட்டது

1 kliaகுறைந்த கட்டண விமானச்சேவைக்கான  மிகப் பெரிய விமான நிலையமான கேஎல்ஐஏ2,  திட்டமிட்டபடி  2014 மே 2-க்குள் செயல்படத் தயாராகிவிடும்.

அதன் முனையக் கட்டிடம் 99 விழுக்காடு தயாராகிவிட்டது என்றும் “முடியும் தருவாயில் உள்ளது” என்றும் மலேசிய விமான நிறுவன ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்(எம்ஏஎச்பி) தலைமை நடவடிக்கை அதிகாரி அப்ட் ஹமிட் முகம்மட் அலி கூறினார்.

“செயல்படத் தொடங்கும்போது ஏறத்தாழ 45 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறனை அது கொண்டிருக்கும். இது இவ்வட்டாரத்தின் விரைவாக வளர்ந்துவரும் விமானப் போக்குவரத்து மையம் என்ற மலேசியாவின் நிலையை மேலும் உறுதிப்படுத்தும்”, என்றார்.

-பெர்னாமா