அம்னோவில் உதவித் தலைவர் தேர்தலில் முன்னாள் மலாக்கா முதலமைச்சர் முகம்மட் அலி ருஸ்தம் பரவலாக நிலவும் எதிர்பார்ப்பைக் கவிழ்த்து விடுவார்போலத் தெரிகிறது.
மூன்று உதவித் தலைவர் பதவிகளுக்காக நடைபெறும் தேர்தல் பற்றிய அண்மைய கணிப்பு இது:
குற்றத்தடுப்புச் சட்டத்துக்குத் திருத்தங்கள் கொண்டு வந்ததாலும் பல்வேறு விவகாரங்களில் கடுமையான போக்கை வெளிப்படுத்தி வந்திருப்பதாலும் புகழ்பெற்று விளங்கும் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி ஒரு இடத்தைப் பெறுவது உறுதி. ஷாபி அப்டாலுக்கு சாபா வாக்கு வங்கி பக்கபலமாக இருக்கும் என்பதால் அவருக்கும் ஓர் இடம் உறுதி. மூன்றாவது இடத்துக்கான போட்டி தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேனுக்கும் கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிருக்கும்தான் என்று இதுவரை கருத்தப்பட்டு வந்தது. ஆனால், இப்போது முகம்மட் அலி ருஸ்தம் அவர்களுக்குக் கடுமையான போட்டி கொடுப்பார் எனத் தெரிகிறது.
உள்ளூர் பல்கலைக்கழக அரசியல் ஆய்வாளர் ஒருவர், ஜாஹிட்டை அடுத்து அலி ருஸ்தம் அதிக வாக்குகள் பெற்றால்கூட வியப்பதற்கில்லை என்றார். முகம்மட் அலியின் செல்வாக்கு அம்னோ உறுப்பினரிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறதாம்.
முகமட் அலி ருஸ்தம் ஒரு இனத்தீவிரவாதி,அம்னோ உறுப்பினர்கள் இவனை ஆதரிப்பதில் வியப்பேதும் இல்லையே!