‘நஜிப்பின் பூமிபுத்ரா கொள்கை என்இபி-இலிருந்து மாறுபட்டதல்ல’

acccimஅண்மையில்,  பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்த பூமிபுத்ரா பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் (பிஇஇ), 1970-இல் கொண்டுவரப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கையைப் போன்றதுதான் என நாட்டின் மிகப் பெரிய சீன வணிகக் கூட்டமைப்பு கூறுகிறது.

ஏழை மலாய்க்காரர்களுக்கு உதவுவதுதான் பிஇஇ-யின் தலையாய நோக்கம் என்று கூறப்படுவதைத் தாம் சந்தேகிப்பதாக மலேசிய சீன வணிகச் சங்கங்களின் கூட்டமைப்பு (எசிசிசிஐஎம்)த் தலைவர் லிம் கொக் சியோங் கூறினார்.

“இது 43 ஆண்டுகளுக்குமுன் கொண்டுவரப்பட்ட என்இபி போன்றதுதான். நாட்டில் மலாய்க்காரர்களில் பலர் இன்னமும் பரம ஏழைகளாக இருப்பது ஏன்?”, என்றும் அவர் வினவினார்.

அரசாங்கம் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடந்து கொண்டு பொருளாதாரத்தின் பெரும் பங்கினை மற்ற இனங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.