தலைமைக் கணக்காய்வாளர் அம்ப்ரின் புவாங், தவறு செய்யும் அரசு ஊழியர்களுக்கு எதிராக ஒழுங்குநடவடிக்கை எடுப்பதில் அரசுத்துறை தலைவர்கள் கண்டிப்பு காட்டுவதில்லை என்கிறார்.
தவறு செய்தால் தண்டனை என்னவென்பதை விவரிக்கும் விதிமுறைகள் எல்லாம் சரியாகத்தான் உள்ளன. ஆனால், அவை செயல்படுத்தப்படுவதில்லை.
அம்ப்ரின், நேற்று, மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினார்.
நடவடிக்கை, அதுவும் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படுவதைக் காண மக்கள் விரும்புகிறார்கள் என்றாரவர்.
“நடவடிக்கை எடுத்தால்தான் அது மற்றவர்களின் கவனத்தைப் பெறும். உரிய பலனும் கிடைக்கும்”, என்றவர் சொன்னார்.
நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களே ஊழல் செய்வதால் மற்றவர் மீது எப்படி நடவடிக்கை எடுப்பது….
எவனுமே ஒழுங்காக வேலை செய்வதில்லை அப்படி இருக்கும்போது யாருக்கு தண்டிக்க தகுதி இருக்கிறது. நீ என்முதுகு சொறி நான் உன் முதுகு சொரிகிறேன் இது தானே இன் நாட்டில் நடக்கிறது.