நாளைய மசீச அவசரப் பொதுக்கூட்டத்தில் (இஜிஎம்), துணைத் தலைவர் லியோ தியோங் லாய்க்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் கொண்டு வர வேண்டாம் எனச் சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்) கேட்டுக்கொண்டிருக்கிறது.
அக்கட்சியில் தலைமைத்துவ நெருக்கடி முற்றுவதைத் தவிர்க்க அத்தீர்மானம் கொண்டுவருவதைக் கைவிட வேண்டும் என மசீச தலைவர் சுவா சொய் லெக்குக்கு ஆர்ஓஎஸ் தலைமை இயக்குனர் முகம்மட் ரஸின் அப்துல்லா கடிதம் எழுதியிருப்பதாக நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் அறிவித்துள்ளது.
லியோமீது நடவடிக்கை எடுக்க நினைத்தால், அப்பொறுப்பை ஒழுங்குக் குழுவிடம் ஒப்படைக்கலாம். பொதுக்கூட்டத்தில் அவரைத் தண்டிக்க வேண்டாம் என அக்கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
லியோவிர்க்கு ஆதரவு தேட ஆர் ஒ எஸ் யார்? பாரிசான் அரசாங்கத்தின் கூலியா? அது அவர்களின் உள்கட்சி பிரட்சனை, அதில் தலையிட ஆர் ஒ எஸ் முயல்வது அத்துமீறல் ஆகும். டி எ பி பிரட்சனையில் அக்கட்சியை கலைக்க முயலும் ஆர் ஒ எஸ் ,ம சீ சா விசயத்தில் லியோவுக்கு சப்ப கட்டு கட்டுவது ஏன். இதிலிருந்து என்ன தெரிகிறது? ஆர் ஒ எஸ் க்கு நேரடி தலையீடு செய்வதால் அது இன்னொரு பாரிசானாக செயல்படுகிறது என்பது விளங்குகிறது.