அம்னோ தலைவர், துணைத் தலைவர் பதவிகள் போட்டியின்றி முடிவு செய்யப்பட்டு விட்ட நிலையில் இப்போது உதவித் தலைவருக்கான தேர்தல் அனைவரின் கவனத்தையும் பெற்றிருக்கிறது.
மூன்று உதவித் தலைவர் பதவிகளுக்காக அறுவர் போட்டியிடுகின்றனர். நடப்பு உதவித் தலைவர்களான அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, ஹிஷாமுடின் உசேன், ஷாபி அப்டால் ஆகியோரை எதிர்த்து முக்ரிஸ் மகாதிர், முகம்மட் ஈசா அப்துல் சமட், முகம்மட் அலி ருஸ்தம் ஆகிய மூவரும் களம் புகுந்திருக்கிறார்கள்.
முகம்மட் ஈசா, முகம்மட் அலி இருவருமே முன்பு உதவித் தலைவர்களாக இருந்தவர்கள். முக்ரிஸ்தான் புதியவர்.
மூன்று உதவித் தலைவர்களுடன் 25 உச்சமன்ற உறுப்பினர்களையும் பேராளர்கள் இன்று தேர்ந்தெடுப்பர்.
சுமார் 146,000 அம்னோ பேராளர்கள் இன்று காலை தொடங்கி வாக்களித்து வருகிறார்கள். தேர்தல் முடிவுகள் இன்று பின்னிரவுதான் தெரியவரும்.