மசீச சிறப்பு பொதுக்கூட்டம்: அமைச்சரவைப் பதவியைத் தவிர்த்து இதரப் பதவிகள் “ஓகே”

 

MCA EGMஅமைச்சரவைப் பதவி ஏற்கக் கூடாது என்று கட்சி முன்பு எடுத்திருந்த முடிவை மாற்றுவதற்காக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை மசீச பேராளர்கள் இன்று நிராகரித்தனர்.

இன்று இச்சிறப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற 2,199 பேராளர்களில் அந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 1,090 பேரும் 1,080 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர்.18 வாக்குகள் செல்லுபடியாகவில்லை.

இதனிடையே, கடந்த பொதுத் தேர்தலிலின் போதும் அதன் பின்னரும் அவரின் செயல்பாடுகளுக்ககாக மசீசவின் துனைத் தலைவர் லியோ தியோங் லாயை கண்டிக்கும் தீர்மானத்தையும் பேராளர்கள் நிராகரித்தனர்.

அத்தீர்மானத்திற்கு ஆதரவாக 965 வாக்குகளும் எதிராக 1,190 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதன் மூலம், லியோ கண்டிக்கப்படுவதிலிருந்து தப்பித்துக் கொண்டாலும், கட்சி மீண்டும் அமைச்சரவை பதவிகளை ஏற்றுகொள்ளச் செய்யும் அவரது முயற்சி தோல்வி கண்டது.

இருப்பினும், செனட்டர் பதவி, அரசாங்கத் தொடர்புள்ள நிறுவனங்களில் பதவிகள், மாநில அரசுப் பதவிகள் மற்றும் கிராமத் தலைவர் பதவி போன்றவற்றை ஏற்றுக்கொள்ளும் இதர இரண்டு தீர்மானங்களை பேராளர்கள் ஏற்றுக் கொண்டனர்.

 

TAGS: