நாடாளுமன்றத்தில், அஸலினா ஒத்மான்(பிஎன் -பெங்கேராங்), அரசாங்கம் குற்றவியல் சட்டத்தில் செய்யும் திருத்தங்களினால் “அப்பாவி மக்கள்” பாதிக்கப்படலாம் என்று கண்டித்தது வியப்பைத் தந்தது.
குறிப்பாக, தேசிய கொடியான ஜாலோர் கெமிலாங்கை அவமதித்தால் ஐந்தாண்டுச் சிறை என்பதை அவர் குறைகூறினார்.
“அத்தவற்றைச் செய்தவன் விளைவுகளை அறியாத ஒரு சிறுவன் என்றால் என்னவாகும்? பாலியல் வல்லுறவில் ஈடுபட்டவர்கள், கொலைகாரர்கள் ஆகியோருடன் அல்லவா அவனும் சிறை வைக்கப்படுவான்?”, என்றவர் கேட்டார்.
பாரிசான் கொண்டு வந்த சாமானிய மக்களை துன்புறுத்தக்கூடிய சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்ததற்காக, ஷபாஸ் அஸ்லினா. பாரிசானிலும் மனசாட்சியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அஸ்லினா அம்னோ மகளிர் தலைவியாக எல்லா தகுதியும் இருக்கு அம்மணி.
அப்படி போடு அரிவாள….
சிப்பிக்குள் முத்தை போல BN என்ற அறிவிலி கூட்டதில் ஒரு அறிவாளி .
நீங்கள் ஜிம்னாஸ்டிக் பயிற்சியில் தேர்ச்சி பெற்று விட்டிர்கள்
வாழ்த்துக்கள் .
அட…. இவ படிச்ச பிள்ளைப்போல இருக்கே…!!!? ஒரு தடவை எழுந்து கையத் தட்டுங்கப்பா!
பேசிவிட்டு பின்னர் பின் வாங்குவாரா என்று
பொறுத்திருந்து பார்ப்போம்!!!!
இவள் காரியக்காரி ,இவளையும் நம் மூதேவிகள் நம்புகிறார்களா ??டேய் தமிழ் நாட்டிலேதான் ஜே போடுறானுங்க உங்களுக்கு புத்தி இல்லையா ?? யாரை நம்ப வேண்டும் என்று ,,
இவளும் ஒரு திருட்டு கம்பனாட்டி ! விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் போது லண்டனில் மலேசிய விளையாட்டு அரங்கம் அமைக்கிறேன் என்று மக்கள் பணத்தை ஏப்பம் விட்டவள் இவள் ! சிட்டிசன் நடேசன் இவளை சண் நாளிதழில் கிழி கிழி கிழித்தார் !
மிஸ்டர் அனோனி… கொஞ்சம் புத்தி கொடுப்பா. நாங்க எல்லாம் முட்டள் கிழடுகள். அறிவு கெட்டுப்போய்விட்டது. உன் புத்தியை வாங்கிக்கொண்டாவது அபிப்பிராயம் சொல்லுகிற மற்றவர்களை ” மூதேவி, டேய் … அவனே…இவனே… என்று தமிழ்ப் பண்பாடு கொஞ்சம்கூட பிசகாம சொல்ல பழகிக்கொள்கிறோம்! ஏனென்றால் உங்களிடம்தான் வள்ளுவன் சொன்ன “சொல்லுக அச்சொல்லை வெல்லும் சொல்” இருக்கிறது!
பாத்திங்களா , பல பேர் அவரை பாராட்டினாலும் , ஒருசிலர் தூற்றுகிறார்களே , இதுதான் நம்மை மேலேரமுடியாமல் முடக்கிகொண்டிருகிறது . வாய திறந்தாலும் குற்றம் திறகாவிட்டாலும் குற்றம் ! எப்பதான் திருந்த போறிங்களோ ??
தப்பு கண்ணா! அம்னோ/அரசாங்க சீர்திருத்தங்களை முடக்கி வைத்தது மாமாக்திர் emipre! நாட்டை பிரித்து ஆளும் specialist காக்க இப்போதான் இல்லைன்னு ஆச்சே,இனி system சரியாக வேலை செய்யும்.அதாவது இரண்டு பிரிவினையும் மோதி ஆட்சியை பிடிக்க முழு conspiracy ஆரம்பம்! வேடிக்கையே இனிதான் இருக்கு!
இவரும் ‘இப்படி அப்படி’ உள்ளவர் தான்! ஆனால் இந்த விஷயத்தில் தைரியமாகக் குரல் கொடுத்தாரே, பாராட்டலாம்!