தம்மை சூலு சுல்தானாக சுய-பிரகடனம் செய்துகொண்டிருந்த ஜமாலுல் கிராம், ஞாயிற்றுக்கிழமை பிலிப்பீன்சில் இறந்துபோனாலும் சூலு படையினரால் சாபாவுக்கு ஏற்பட்ட மிரட்டல் முடிவுக்கு வந்துவிடாது என்கிறார் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி.
“சூலு சுல்தானின் வாரிசுகள் என்று கூறிக்கொண்டு சுமார் ஏழு பேர் சூலு சுல்தான் பதவிக்கு உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்”, என்று ஜாஹிட் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“கிராம் இறந்து விட்டார் என நாம் மிதமாய் இருந்து விடக் கூடாது. நிலைமையைத் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணித்து வர வேண்டும்”,என்றாரவர்.
சூலு சுல்தான் இறப்பை கேள்வி பட்டு மகிழ்ச்சி அடைந்த அஹ்மட்
ஜாஹிட்டுக்கு வாழ்துக்கள் .
ஆமாம் புலி வருது, புலி வருது என்று பயம் காட்டிக் கொண்டிருந்தால்தானே அம்னோ அரசியலில் குளிர் காயலாம்.
1956 முன் பிரிட்டிஷ்காரர்கள்,மலேசியாவை மலேசியர்களிடமிருந்து நாட்டை கைப்பற்றி,மீண்டும் மலேசியர் களிடமே ஒப்படைத்தனர்,ஆனால் சபா,சரவாக்கை,அந்நாட்டு மக்களிடமிருந்து கைப்பற்றிய பிரிட்டிஷ் மலேசியாவிடம் ஒப்படைத்ததை ஒருசில தரப்பினர் இதுவரையிலும் திருப்தி அடையவில்லை,அதில் சூலு சுல்தானும் ஆவார். ஆகையால்தான் மருட்டல் முடிவுக்கு வராது.
பொது மக்களை மிரட்ட நீ தான் இருக்கிறாயே பன்னாட !