அம்னோ உச்சமன்றத்துக்குப் போட்டியிட்ட நூர் ஜஸ்லான் முகம்மட், அப்போட்டியில் தோற்றதற்கு வாக்குகளை விலைகொடுத்து வாங்க முயன்றதுதான் காரணம் என்று கூறப்படுவதை மறுத்தார்.
தாம் வாக்குகளுக்குப் பணம் கொடுக்கவில்லை என்றும் பரப்புரை செய்வதற்குத்தான் பணம் செலவிட்டதாகவும் அவர் கூறினார்.
“அவர்கள்,(அமைச்சர்கள், துணை அமைச்சர்கள்) எங்கு வேண்டுமானாலும் சென்று பரப்புரை செய்ய முடியும். என்னால் அது முடியவில்லை. அதனால் பரப்புரை செய்வதற்கு ஆள்கள் வைத்தேன். அதற்குத்தான் பணம் கொடுத்தேன். வாக்குகளுக்கு அல்ல”.
புதிய முறைப்படி தம்மைப் போன்ற புதியவர்களால் போட்டியிடும் செலவைத் தாங்கிக்கொள்ள இயலாது என்றாரவர். செப்டம்பரில் தேர்தல் செலவு பற்றி ஒரு மதிப்பீட்டை வெளியிட்ட நூர் ஜஸ்லான், ஒரு தொகுதியில் பரப்புரை செய்ய ரிம200,000 செலவிட வேண்டியிருக்கும் எனவும் உதவித் தலைவர் பதவி வேட்பாளர்கள் குறைந்தது 64 தொகுதிகளையாவது தங்கள் பிடிக்குள் கொண்டுவர ரிம13,000,000 செலவிட வேண்டியிருக்கும் எனவும் கூறியிருந்தார்.
“அது ஒரு மதிப்பீடுதான். ஆனால், உதவித் தலைவராவதற்கு 64 தொகுதிகள் போதாது என்பது இப்போது தெரிய வருகிறது”, என்றாரவர்.
ஆண்டவனுக்கு தான் உண்மை தெரியும் ????
samundi ஏன் அய்யா காசு வாங்கியவனுக்கு உண்மை தெரியாதா?