‘புறந்தள்ளப்பட்ட’ மகாதிருக்கு சுங்கை லிமாவில் பரப்புரை செய்யும் துணிச்சல் உண்டா?

1 by electபிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கு துணிச்சல் இருந்தால் கெடா, சுங்கை லிமாவ்  இடைத் தேர்தலுக்குப் பரப்புரை  செய்ய வரட்டும் எனச் சவால் விடுத்துள்ளார்.

“சுங்கை லிமாவை ஏன் நாம் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்?  அதன்வழி பிஎன்னுக்கும் அம்னோவுக்கும் அம்னோ தேர்தலில் தோற்றுப்போன முக்ரிசுக்கும் இங்கும் அவர்கள் நிராகரிக்கப்படுகிறார்கள்  என்ற  செய்தியை உணர்த்த வேண்டும்.

“அம்னோவே மகாதிரையும் முக்ரிசையும் புறந்தள்ளி விட்ட பிறகு நீங்கள் எதற்காக இந்த இடைத் தேர்தலில் அக்கட்சியை ஆதரிக்க வேண்டும்”,  என்றவர்  வினவினார்.

நேற்றிரவு சுங்கை லிமாவ் டாலாமில், இடைத் தேர்தலில் பாஸ் வேட்பாளரான முகம்மட் அஸாம் சமட்டை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வில் அஸ்மின் பேசினார்.

சுங்கை லிமாவ் சட்டமன்ற  உறுப்பினரான பாஸ் கட்சியின் அசிசான் அப்துல் ரசாக், செப்டம்பர் 26-இல்  காலமானதை அடுத்து அங்கு  இடைத் தேர்தல் நடைபெறுகிறது.