குறைந்தபட்ச சம்பளம் உடனடியாக அமலாக்கப்பட வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தும் மகஜர் எதிர்வரும் 24.10. 2013 (வியாழக்கிழமை) இல் காலை மணி 10.30 க்கு நாடாளுமன்ற வளாகத்தில் மனிதவள அமைச்சரிடம் வழங்கப்படும்.
இக்கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்க தொழிலாளர்களும் தொழிற்சங்க தலைவர்களும் பொதுமக்களும் திரண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மகஜர் வழங்குவதெல்லாம் வேலைக்கு ஆகாது, எல்லா தொழிலாளர்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும். குறைந்தபட்ச சம்பளம் பெற்று கொடுப்பதாக நஜிப் கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று, மஇகா பச்சோந்திகள் குரல் கொடுப்பார்களா. பாரிசான் கொண்டு வந்த சாமானிய மக்களை துன்புறுத்தக்கூடிய சட்டத்திற்கு எதிராக அஸ்லினா நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்ததால், இன்று பாரிசான் அரசாங்கம் அந்த சட்ட திருத்தத்தை மீட்டுக்கொண்டது. ஒரு பெண்ணுக்கு இருக்கும் தைரியம் கூட மஇகா வாய்சவடால் வீரனுங்களுக்கு இல்லையே.
நாடு சுதந்திரம் அடைந்து 57 வருடமாகிறது ! இன்னும் மாதம் சம்பளம் கேட்டு மகஜரா ? அரவேக்காடுகளே அரசாங்கத்தை முதலில் மாற்றுங்கள் !
இதுவரைக்கும் சம்பள உயர்வு மகஜர் 1000 பக்க கதை புத்தகம் இருக்கும்.இது 10 ஆண்டுகள் தொடர்கதை.முன்னாள் ம சி சா லிம் அஹ லேக் முதல் கடந்த சுப்பிரமணி சுவாமிகள் வரை பட்டை நாமம்தான்.
மலேசியாவில் இந்தியர்களை பிரதிநித்து ம இ கா என்று ஒரு கற்சி
இருக்கின்றதா ???இந்த பரதேசிகள் எங்கு போய் தொலைந்தார்கள்
யாருக்காவது தெரியுமா ???
தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் முதலில் வரவேண்டுமே ! வருவார்களா..? அவர்கள் தான் மத்திய அரசாங்கத்திடம் மண்டிட்டு கிடக்கிறார்களே..!
தென்னிந்திய தொழிலாளர் நிதியில் மகா(திமிர்)தீர் மாமாக் குட்டியும் சாதனைத் தலைவன் ச. சாமிவேலுவும் கையை வைத்து ஏப்பமிட்ட பொது; தேசிய தமிழ் இளஞர் மணி மன்றத்தின் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில்
மலேசிய திராவிடர் கழகம், தொழிற்ச் சங்கங்கள் மேலும் சில அரசு சாரா இயக்கங்கள் நடத்திய ஆர்பபாட்டர்த்திற்குப் பின்னர், தேசியத்
தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவர் கே. சங்கரன் மகா(திமிர்)தீர்
மாமா குட்டிக்கும் சாமிவேலுவிற்கும் ஆதரவா அடித்தாரே ஒரு ‘அந்தர் பல்டி’ !!!!!
அதன் பின் ‘டத்தோ’ ஆனார், (அது வேறு கதை) அதை இன்றும் மறக்க முடியுமா?? தொழிற்ச் சங்க ‘தொடை நடுங்கி’ தலைவர்களா முன் வருவார்கள்??? வெங்காயம்…
இக்கோரிக்கை நியாமானது. மலேசியா வளர்ச்சி அடைந்த நாடாக உருமாற்றம் பெறுவதற்கு மக்களின் வாழ்க்கைதரம் கண்டிப்பாக மேம்பாடு அடைய வேண்டும்.
சார் இவனுங்களை நம்பாதிங்கோ திருட்டு பயலுங்க்கோ.வீட்டை காலி செஞ்சா ஆர் எம் 10 ஆயிரம் தர்றதா டிவேலோபேர் சொன்னான்,ஆனா இந்த கூட்டம் வாங்காதே சொன்னுச்சி,நாங்களும் போராடினோம்.வீடு ஓடசிடாங்க்கோ,போய் கேட்ட மஜ்லிஸ்லே போய் கேளுங்கோ சொல்றாங்கோ,அங்கே போன லிஸ்ட் கேக்ராங்க்கோ,யிவிங்ககிட்ட கேட்ட,ஜவாடன் குவாச கிட்டே போ சொல்றாங்கோ அங்கே போய் கேட்டா என்.ஜி.வோ கிட்டே இருக்கு அங்கே போ சொல்றாங்கோ.கடைசிவரை வொண்ணும் கிடைகளே.ஆள் சேர்க்க தான் இந்த நாடகம்.பொம்பள பொறுக்கி நெறையா இர்கான்,கவனம்3.