எம்பி: அணைக்கட்டு நீர்மட்டம் ஏன் கண்காணிக்கப்படவில்லை?

1 damகேமரன் மலையில் சுல்தான் அபு பக்கார் அணைக்கட்டில் நீர்மட்டம் ஏன் தொடர்ந்து கண்காணிக்கப்படவில்லை என்பதை தெனாகா நேசனல் பெர்ஹாட் (டிஎன்பி) விளக்க வேண்டும். தொடர்ந்து கண்காணித்து வந்திருந்தால் அணைக்கட்டு நீரை அவசரமாக திறந்துவிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என்று டிஏபி-இன் ராவுப் எம்பி முகம்மட் அரிப் சப்ரி அப்துல் அஜீஸ் கூறினார்.

நீர்மட்டம்   “திடீரென்று  உயர்ந்து விடுவதில்லையே” என்றாரவர்.

கேமரன் மலை வெள்ளப் பெருக்கு மீது  விவாதம் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும்  அவசரத் தீர்மானம் ஒன்றை முகம்மட் அரிப் மக்களவையில்  தாக்கல் செய்துள்ளார்.