பிகேஆர்: ஜிஎஸ்டி வருமானத்தைப் பெருக்கும் ‘சோம்பேறித்தனமான’ வழிமுறை

1 budgetபொருள், சேவைகள் வரி (ஜிஎஸ்டி) என்பது அரசாங்க வருமானத்தைப் பெருக்குவதற்கான  ‘சோம்பேறித்தனமான’ வழிமுறையாகும் என பக்காத்தான் ரக்யாட் கூறுகிறது.

ஜிஎஸ்டி-யைக் கொண்டுவந்து ருசி  கண்டுவிட்டால் பிறகு,  அரசாங்கம் ஒருபோதும் அதைக் குறைக்காது என பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் குறிப்பிட்டார்.

நுருல், இன்று நாடாளுமன்றக் கட்டிடத்தில் பக்காத்தான் ரக்யாட்டின் நிழல் பட்ஜெட்டை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் பேசினார்.

அவரின் பிகேஆர் சகாவான வோங் சென், வரிசெலுத்துவோர் எண்ணிக்கை உயர்ந்தாலே போதும் அரசாங்கத்தின் வருமானம் உயர்ந்து விடும் என்றார்.

“பலர் வருமான வரி செலுத்துவதைத் தவிர்க்கிறார்கள், ஏனென்றால், பணத்தை அரசாங்கம் செலவிடும் முறை அவர்களுக்குப் பிடிக்கவில்லை”, என வோங் கூறினார்.