கெடா சுங்கை லிமாவ் இடைத் தேர்தலில் பிஎன் வேட்பாளருக்கு வாக்களிக்கப்பதற்காகக் கையூட்டு கொடுக்கும் முயற்சி நடக்கிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என பாஸ் தலைவர்கள் கூறுகின்றனர்.
பல இடைத் தேர்தல்களிலும் அது நடந்துள்ளதாகக் கூறிய பாஸ் உதவித் தலைவர் மாபுஸ் ஒமார், சுங்கை லிமாவிலும் அது நடந்தால் தேர்தல் ஆணையம் கடுமையான நடந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
சுங்கை லிமாவில், அவ்வாறு நடந்ததற்கு ஆதாரம் உண்டா என்று கேட்டதற்கு இப்போதைக்குக் ஆதாரங்கள் இல்லை என்றார். ஆனால், அது எப்படி நடக்கிறது என்பதை வருணித்தார்: “வாக்காளர்களுக்கு ரிம200-ரிம300 முன்பணம் கொடுத்து அவர்களிடம் பிஎன்னுக்கு வாக்களித்ததற்கான சான்றுகளை (கைபேசி கேமிராவால் எடுக்கப்பட்ட) நிழற்படங்களாகக் காண்பிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
“அவர்கள் சான்றுகளைக் காட்டினால் ,வாக்களிப்புக்கு மறுநாள் பாக்கிப் பணம் கொடுக்கப்படுகிறது”.