கோலாலும்பூர் உயர் நீதிமன்றம், பல பில்லியன் ரிங்கிட் பெறும் PKFZ திட்டத்தில் அரசாங்கத்தை ஏமாற்றியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் லிங் லியோங் சிக்கை விடுவித்துள்ளது.
தீர்ப்புக் குறித்து கருத்துரைக்குமாறு லிம்மைக் கேட்டதற்கு “கருத்துச்சொல்ல எதுவுமில்லை” என்று கூறிவிட்டார்.
PKFZ திட்டத்துக்கான நிலத்தின் பெறுமதி ரிம1,088,456,000 என்று சொத்து மதிப்பீட்டுத் துறையால் நிர்ணயிக்கப்பட்டிருந்ததை அறிந்திருந்தும் அந்த விலையின்மீது ஆண்டுக்கு 7.5 விழுக்காடு கூடுதல் வட்டி விதிக்கப்பட்ட விவகாரத்தை அரசாங்கத்திடம் தெரிவிக்காமல் ஏமாற்றிவிட்டார் என அந்த முன்னாள் மசீச தலைவர்மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
அதன் விளைவாக அந்நிலத்தை வாங்குவதற்கு அரசாங்கம் ரிம720 மில்லியனைக் கூடுதலாகக் கொடுத்தது.
சம்பந்தப்பட்டவர்கள் , அனைவருக்கும் நிம்மதி பெருமூச்சு . நீதி வென்று விட்டது . ஜனநாயகம் ஜாலியாக உலா வரும் .