ரிங்லெட் துயரச் சம்பவம், அதைவிட மோசமான அவலங்கள் நிகழும் என்பதற்கு அறிகுறி

1 floodகேமரன் மலையில் அணைக்கட்டு நீர் திறந்துவிடப்பட்டதால்  பெர்தாம் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட வெள்ளம், அதை விடவும் மோசமான அவலங்கள் அடுத்து நிகழலாம் என்பதற்கான அறிகுறியாகும் என்று தெலுக் இந்தான் முன்னாள் எம்பி எம். மனோகரன் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அணைக்கட்டு நீர் திறந்து விடப்பட்டதில்  நிலையான இயக்க முறைமைகள் (எஸ்ஓபி) பின்பற்றப்பட்டதாக தெனாகா நேசனல் பெர்ஹாட் (டிஎன்பி) கூறுகிறது. ஆனாலும், பல கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை என்றாரவர்.

இவ்விவகாரம்மீது முழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் எதையும் மூடிமறைக்கக் கூடாது என்றும் அவர் கோரினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மை தெரிய வேண்டும். அத்துடன் அம்மக்களின் வாழ்க்கை விரைவில் வழக்கநிலைக்குத் திரும்புவதையும் டிஎன்பி உறுதிப்படுத்த வேண்டும்.

மலைச் சரிவுகளில் கட்டுப்பாடின்றி மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதால் கேமரன் மலையில் இப்படிப் பல பேரிடர்களை எதிர்பார்க்கலாம் என்றும் மனோகரன்  எச்சரித்தார்.