வெள்ளப் பேரிடரில் காணாமல்போன பெண்ணைத் தேடும் பணி தொடர்கிறது

cameronபுதன்கிழமை கேமரன் மலையில் ஏற்பட்ட வெள்ளத்திலும் சகதி ஓட்டத்திலும் அடித்துச் செல்லப்பட்ட இந்தோனேசியர் என நம்பப்படும் ஒரு பெண்ணைத் தேடும் பணி தொடர்கிறது.

அப்பணியில், கேமரன் மலை தீ அணைப்பு மீட்புப் பணித் துறை, போலீஸ், சிவில் தற்காப்புத் துறை, ரேலா ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 300 பேர் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இன்று மூன்றாவது நாளாக தேடும்பணி தொடர்கிறது என கேமரன் மலை தீ அணைப்பு மீட்புப் பணித் துறைத் தலைவர் யுஸ்ரி அப்துல்லா சனி கூறினார்.

அணைக்கட்டு நீர் திறந்துவிடப்பட்டதால் பெர்தாம் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் மூழ்கி இருவர் உயிரிழந்தனர். இன்னொருவர் மாரடைப்பினால் காலமானார்.

-பெர்னாமா