மிகுந்த சர்ச்சைக்குள்ளான பொருள், சேவைகள் வரி(ஜிஎஸ்டி), 6 விழுக்காடு என்னும் விகிதத்தில் 2015, ஏப்ரல் முதல் தேதியிலிருந்து அமலாக்கம் காணும்.
இன்று நாடாளுமன்றத்தில் 2014 பட்ஜெட்டைத் தாக்கல் செய்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இதனைத் தெரிவித்தார். அது அமலாக்கம் காணும்போது விற்பனை, சேவை வரி இரத்தாகும்.
அரிசி, சீனி, உப்பு, டால், சமையல் எண்ணெய், மிளகாய், மூலிகைகள், பிளாச்சான், குழாய் நீர், மின்சாரம் (வீட்டுப் பயனீட்டுக்கு மட்டும்), அரசாங்கச் சேவைகள், பொதுப்போக்குவரத்து (பேருந்து, எல்ஆர்டி, பயணப்படகு, டோல் கட்டணம்), சொத்து விற்பனை, கொள்முதல், வாடகை முதலியவற்றுக்கு ஜிஎஸ்டி-இலிருந்து விலக்களிக்கப்படும்.
ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு வரும்போது இப்போது பிரிம் உதவித் தொகை பெறுவோர், ஒருதடவை மட்டும் அளிக்கப்படும் உதவித் தொகையாக ரிம300 பெறுவார்கள். தனிநபர் வருமான வரியில் மேலும் 3 விழுக்காடு குறைக்கப்படும். இதனால், ரிம4,000 அல்லது குறைவாக மாத வருமானம் பெறும் குடும்பங்கள் வருமான வரி செலுத்த வேண்டி இருக்காது. இதனால், 300,000 வரி செலுத்துவோர் பயனடைவர்.
நாளை தொடங்கி சீனிக்கு அளிக்கப்பட்டு வந்த 34சென் உதவித் தொகை இரத்தாகிறது.
ஜிஎஸ்டி வரி 149 நாடுகளில் 2010 வரை அமல் படுத்த பட்டுள்ளது,
உலகில் இரு நாடுகளில் மட்டுமே குறைவாக உள்ளது ஜப்பான் 5 சதவிகிதமும், மலேசியா 6 சதவிகிதமும்.
ஜிஎஸ்டி வரி 149 நாடுகளில் 2010 வரை அமல் படுத்த பட்டுள்ளது, இந்த வரியை குறைவான சதவிகிதத்தில் அமல் படுத்திய நாடுகள் இரண்டு, ஜப்பான் 5 சதவிகிதமும், மலேசியா 6 சதவிகிதம்.
இன்று முதல் அணைத்து அன்புள்ளங்களும் பிரதமருக்கு நல்வாழ்த்து சொல்லவேண்டும் . ஆகா ,ஓகோ , என்று கட்சி தலைவர்கள் புகழ் மாலை சூட, ஒவ்வொருவரும் தயாராக முனைப்பு காட்டுங்கள் . அவரவர் பாணியில் , பிரதமர் சொக்கும் அளவுக்கு , பூரிப்பு அடையும் அளவுக்கு , வாழ்த்துங்கள். குறைகள் இருப்பின் ஒரு பொருட்டாகவே கருதவேண்டாம் .
அருமையான பட்ஜெட்,சீனிக்கு உதவி தொகை வழங்கபடாமல்
செய்தது.