இதுவரையில் சர்ச்சையில் இருந்து வந்த பொருள்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 2015 ஆம் ஆண்டில் அமல்படுத்தப்படும். அவ்வரி 6 விழுக்காடாக இருக்கும். இது நஜிப்பின் பட்ஜெட் உரையின் சிறப்பு அம்சமாகும்.
நிதி அமைச்சர் நஜிப் ரசாக்கின் 2014 ஆம் ஆண்டு பட்ஜெட்டின் கருப்பொருள் “பொருளாதார மீட்சியை வலுப்படுத்துதலும் உருமாற்றத்தை விரைவுப்படுத்துதலும் வாக்குறுதிகளை நிறைவேற்றுதலும்” ஆகும்.
கணநேரக் கண்ணோட்டம்
மொத்த பட்ஜெட் – ரிம264.2 பில்லியன்.
நடைமுறைச் செலவு – ரிம217.7 பில்லியன். மேம்பாட்டு செலவு – ரிம146.5 பில்லியன்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி):
2014: 4.5% – 5.5%.
2013: 4.5%- 5.5%.
2012: 4.5% – 5.0%.
வரூமானம்:
2014: ரிம224.1 பில்லியன்.
2013: ரிம220.1 பில்லியன்.
2012: ரிம206.2 பில்லியன்.
பற்றாக்குறை:
2014: ஜிடிபியிலிருந்து 3.5%.
2013: ஜிடிபியிலிருந்து 4.0%.
2012: ஜிடிபியி;லிருந்து 4.5%.
நிஜ பிரதமர் நஜிப் நிஜ பட்ஜெட் 2014 ல் இந்தியர்களுக்கு அள்ளிகுடுத்தார். நிழல் பிரதமர் அன்வர் நிழல் பட்ஜெட் 2014 ல் அல்வா குடுத்தார், GST வரி 2010 வரை 149 நாடுகளில் அமல் படுத்த பட்டுள்ளது, இந்த வரியை உலகத்திலேயே மிக குறைவாக அமல் படுத்தியது இரு நாடுகள் மட்டுமே மலேசியாவில் 6 சதவிகிதமும் ஜப்பானில் 5 சதவிகிதம்.
பெட்ரோல் விளையும் நாட்டில்….. GST எதற்கு ங்கறேன்…