கமலநாதன், பிரச்னையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்

kamalanatahanஉங்கள் கருத்து  ‘அவ்வப்போது அறிவுரை கூறுவோம் என்கிறீர்களே, அதன் பொருள் என்ன? ஒவ்வோர் ஆண்டும் இது தொடர்வதற்கு இடமளித்து அதன்பின்னர் செய்தித்தாள்களில் நாடகமாட போகிறீர்களா?

கமலநாதன்: பள்ளிகளில் குர்பானுக்கு இடமில்லை

ஆரிஸ்46:  பாவம் கல்வி துணை அமைச்சர் II, பி.கமலநாதன். அமைச்சின் விதிமுறைகளை மீறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம்கூட அவருக்கு இல்லாதிருக்கிறது. பள்ளிகளில் மாடுவெட்டியது கவனக்குறைவான செயலாம்.. வெட்கக்கேடு.

ஸ்ரீபிரிஸ்தினா பள்ளியில் தலைமையாசிரியர் ‘குளியலறையை உணவருந்தும் இடமாக்கி’ குளறுபடி செய்ததை மூடி மறைத்தார், இப்போது பூச்சோங் தலைமையாசிரியரின் செயலுக்கு சப்பைக்கட்டு கட்டுகிறார்.

இப்படிப்பட்ட செயல்கள் மீண்டும் நிகழாதிருக்க ஒரு சுற்றறிக்கை அனுப்ப மறுப்பது அவரின் கையாலாகாத்தனத்தைத்தான் காண்பிக்கிறது.

ஓடின்: கமலநாதன், ஒரு சுற்றறிக்கை அனுப்புவது அவசியம். இல்லையென்றால் இதுபோன்ற செயல் தொடரும்.  மலேசியாவில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் இருக்கின்றன. ஒவ்வின்றிடமும் போய் அறிவுரை சொல்லிக் கொண்டிருக்க முடியாது.

பெயரிலி:  கமலநாதன் பிரச்னைக்குத் தீர்வுகாண முயல்வதாக தெரியவில்லை.  சுற்றறிக்கை அனுப்புங்கள் என்றால் “தேவை இல்லை” என்கிறார். அவருக்கோ அவரின் ‘போஸு’க்கோ பிரச்னைக்கு ஒரு முடிவான தீர்வு காணும் நோக்கமில்லை.

வீரலேசியன்:  இந்த ஆண்மையற்ற துணை அமைச்சருக்கு தம் ‘துவான்’களின் கையை முத்தமிடத் தெரிகிறது. ஆனால், பள்ளிகளில் மாடு வெட்டக் கூடாது என்று தடைசெய்யும் உத்தரவைப் போடத் தெரியவில்லை.

ஏசிஆர்: பள்ளிகளில் மாடு வெட்டுதல் பரவலாகவே நடக்கிறது. முஸ்லிம் ஆசிரியர்கள் பலரும், தெரிந்தோ தெரியாமலோ அது அனுமதிக்கப்பட்ட ஒன்றாகவே நினைக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் ஒரு சுற்றறிக்கை அனுப்புவது அவசியம். அல்லவா? அவ்வப்போது அறிவுரை கூறுவோம் என்கிறீர்களே, அதன் பொருள் என்ன? ஒவ்வோர் ஆண்டும் இது தொடர்வதற்கு இடமளித்து அதன்பின்னர் செய்தித்தாள்களில் நாடகமாட போகிறீர்களா?.

விசுவாசி:  இவர் மன்னிப்பு கேட்கத்தான் லாயக்கு. இவரிடம் போய் உத்தரவு போடுங்கள் என்றால், எப்படி?