பள்ளிகளில் குர்பான் -அமைச்சர்களிடையே முரண்பாடு

idrisஇரண்டாம் கல்வி அமைச்சர் இட்ரிஸ் ஜூஸோ,  பள்ளிகளில் மாடுகள் அல்லது மற்ற விலங்குகள் குர்பான் செய்யப்படுவதை அமைச்சு  தடை செய்யாது  என்று கூறுகிறார்.

ஆனால், அதைச் செய்யும்போது பள்ளி நிர்வாகம் மற்ற இனத்தவர் உணர்வுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றவர்  வலியுறுத்தினார்.

“அப்படிப்பட்ட நிகழ்வுகளை  நடத்தும்போது மற்றவர்களையும் மதிக்க வேண்டும்”, என்றவர் முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.

இட்ரிஸ் இப்படிக் கூறுகிறார்.  ஆனால், கடந்த வாரம் , கல்வி துணை அமைச்சர்I I பி.கமலநாதன், பள்ளிகளில் குர்பான் செய்ய அனுமதியில்லை என்று கூறியிருந்தார்.

TAGS: